தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக தொடர்ந்து அதிகரித்து சென்ற கொரோனா பாதிப்பு, தற்போது கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. கடந்த ஒரு வாரமாக தினசரி ஆயிரம் என்ற அளவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில், இன்று தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 421 ஆக பதிவாகி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22 லட்சத்து 37 ஆயிரத்து 233 ஆக பதிவாகி உள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனாவால் 5 லட்சத்து 16 ஆயிரத்து 628 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,644 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தவிர பிற 36 மாவட்டங்களில் 18 ஆயிரத்து 777 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனாவால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 404 ஆக குறைந்துள்ளது. சென்னையில் 25 ஆயிரத்திற்கும் குறைவாக கொரோனாவிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




தமிழ்நாடு முழுவதும் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கையில் ஆண்கள் மட்டும் 13 லட்சத்து 13 ஆயிரத்து 878 நபர்கள் ஆவர். பெண்கள் 9 லட்சத்து 23 ஆயிரத்து 317 நபர்கள் ஆவர். மூன்றாம் பாலினத்தவர்கள் 38 நபர்கள் ஆவர். இன்று மட்டும் தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 11 ஆயிரத்து 227 நபர்கள் ஆவர். பெண்கள் 9 ஆயிரத்து 194 நபர்கள் ஆவர்.


கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து இன்று மட்டும் வீடு திரும்பியவர்கள் 33 ஆயிரத்து 161 நபர்கள் ஆவர்.  இதனால், தமிழ்நாடு முழுவதும் குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 65 ஆயிரத்து 939 நபர்களாக உயர்ந்துள்ளது.




இன்று மட்டும் கொரோனா வைரஸ் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் 434 நபர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 166 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆவர். 268 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆவர். இதன் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 27 ஆயிரத்து 5 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 475 நபர்களாக பதிவாகி உள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் 110 நபர்கள் எந்தவித பாதிப்பும் இல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழகத்தில் கடந்த வாரம் 37 ஆயிரம் என்ற அளவில் பதிவாகி வந்த கொரோனா பாதிப்பு, தற்போது 21 ஆயிரம் என்ற அளவில் குறைந்துள்ளது மக்களுக்கு சற்றே ஆறுதல் அளிப்பதாக உள்ளது. ஆனால், உயிரிழப்போரின் எண்ணிக்கை மட்டும் தொடர்ந்து 400க்கும் மேல் பதிவாகி வருகிறது. இந்த நிலையில், முழு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளை அதிகாலையுடன் முடிவுக்கு வரும் நிலையில், நாளை முதல் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வர உள்து என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க : Dr Amalorpavanathan : "மருத்துவத்துறையில் ஒரு பகுத்தறிவாளன்” : யார் இந்த மருத்துவர் அமலோற்பவநாதன்!