மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதினம் புனித பயணம் புறப்படும் தொடக்க விழாவுக்குத் தமிழக ஆளுநர் ரவி சென்றிருந்தார். ஆளுநர் ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக விசிக, திக உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகள் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மீது கல், கையில் இருந்த கறுப்புக் கொடி முதலியவை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் ஆளுநரின் கார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் வீசியது பட்டதாக ஒரு புகார் எழுந்தது. 


இந்நிலையில் ஆளுநர் சென்ற வாகனம் பாதுகாப்பாக அந்தத் தாக்குதலில் பாதிப்பு அடையாமல் வந்ததாக ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பாதுகாப்பு அதிகாரி விஸ்வேஷ் சாஸ்திரி ஐபிஎஸ் தமிழ்நாடு டிஜிபிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “தமிழ்நாடு ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி என்ற முறையில் ஆளுநர் எங்கு சென்றாலும் அவருடன் நான் பாதுகாப்பிற்கு சென்று வருகிறேன்.




அந்தவகையில் இன்று மாண்புமிகு ஆளுநர் மயிலாடுதுறையில் தர்மபுரம் ஆதினம் நிகழ்ச்சிகாக சென்றார். அவருடைய வாகனம் காலை 9.30 மணிக்கு திருக்கடையூரிலிருந்து மயிலாடுதுறை நோக்கி சென்றது. அந்தக் காரில் நான் முன் பக்கத்தில் அமர்ந்திருந்தேன். ஆளுநர் அவர்கள் பின்பக்கத்தில் அமர்ந்தார். எங்களுக்கு முன்பாக பாதுகாப்பு கான்வாய் கார் சென்றது. சுமார் 9.50 மணியளவில் ஏவிசி கல்லூரி அருகே கூடியிருந்தவர்கள் சிலர் ஆளுநரின் கான்வாய் வாகனத்தை நோக்கி நெருங்கி வந்தனர்.


மேலும் அவர்கள் ஆளுநர் அவர்களின் வாகனத்தை தடுத்து நிறுத்த முற்பட்டனர். அத்துடன் அவருடைய வாகனம் மீது கொடிகள் ஆகியவற்றை வீச தொடங்கினர். எனினும் நல்வாய்ப்பாக ஆளுநர் அவர்களின் வாகனம் எந்தவித பாதிப்பும் இல்லாமல் அங்கு இருந்து பத்திரமாக சென்றது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஐபிசி பிரிவு 124-ன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுகிறேன். அதற்காக இந்த அறிக்கையை தாக்கல் செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 


இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பட்ட கருத்துகள் எழுந்த நிலையில் இந்த அறிக்கை அவை அனைத்தியும் தெளிவுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண