Tamil Nadu Govt Public Holidays 2025: 2025ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் சிறப்பு தினங்களில் மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன ( இந்த விடுமுறை நாட்களானது, 2025ஆம் ஆண்டில் சிறப்பு பண்டிகைகள் மட்டுமே, அதாவது வழக்கமாக விடுமுறை வழங்கப்படும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளை தவிர்த்து என்பது குறிப்பிடத்தக்கது) .
டாப்பில் ஜனவரி:
2025 ஆம் ஆண்டில் மாதங்களில், அதிக விடுமுறை நாட்கள் உள்ள மாதமாக ஜனவரி உள்ளது. ஜனவரியில் ஆங்கில புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம், குடியரசு தினம் என 5 நாட்கள் அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சனி - ஞாயிறு விடுமுறை தினங்கள் வேறு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் மாதத்தில் சனி ஞாயிறை தவிர ஒரு நாள் கூட அரசு விடுமுறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு தினங்கள்:
பொங்கல் பண்டிகையானது செவ்வாய்க் கிழமையான ஜனவரி 14 அன்றும் , திருவள்ளூர் தினம், புதன்கிழமையான ஜனவரி 15, அன்றும், அதை தொடர்ந்து ஜனவரி 16 உழவர் தினம் வியாழக்கிழமை அன்றும் வரவுள்ளது. ஒருவேளை , அரசு மனது வைத்தால், வெள்ளிக்கிழமையும் கூடுதலாக விடுமுறை அளித்து சனி - ஞாயிறு விடுமுறை சேர்த்து அளிக்குமா என்று எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
- தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 ஆம் தேதி ( திங்கட்கிழமை ) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- ரம்ஜான் பண்டிகையானது, மார்ச் 31 வரவுள்ளதால் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- புனித வெள்ளி ஏப்ரல் 18 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கூடுதலான விடுமுறை குறித்த தகவல்களுக்கு, இந்த புகைப்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.