வடகிழக்கு பருவமழைக்கு தயாரா? விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன? 

இப்பருவத்திற்கு, டெல்டா மாவட்டங்களுக்கு தேவையான உரங்களான யூரியா 53,366 மெட்ரிக் டன், டிஏபி 9,181, பொட்டாஸ் 14,196 மற்றும் காம்ப்ளக்ஸ் 24,483 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது.

Continues below advertisement

வட கிழக்கு பருவமழை 2024-ல், வரும் 23.11.2024 முதல் 27.11.2024 வரை கனமழை முதல் அதிகனமழை பெய்ய உள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.  குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் அறிவுத்தல்களை வழங்கியுள்ளார். 

Continues below advertisement

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கனமழையால் ஏற்படும் பாதிப்பை வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கண்காணித்திட குழு அமைக்கப்பட்டு பயிர்சேத நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இப்பருவத்திற்கு, டெல்டா மாவட்டங்களுக்கு தேவையான உரங்களான யூரியா 53,366 மெட்ரிக் டன், டிஏபி 9,181, பொட்டாஸ் 14,196 மற்றும் காம்ப்ளக்ஸ் 24,483 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது.

வடகிழக்கு பருவமழையின் காரணமாக வயல்களில் நீர் தேங்கும்பட்சத்தில் நீரை வெளியேற்றுவதற்கு ஏதுவாக 21 எண்கள் நீர் இறைக்கும் கருவிகள் மேலும், 805 விசையிலான மரம் அறுக்கும் கருவிகள் 60 மண் அள்ளும் இயந்திரங்கள் மற்றும் 85 மண் தள்ளும் இயந்திரங்கள் வேளாண்மை பொறியியல் துறை மூலம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், வடகிழக்கு பருவமழையின் போது கீழ்க்கண்ட தொழில்நுட்பங்களை விவசாயிகள் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1. மழைநீர் தேங்கும்பட்சத்தில் வயங்களில் உடனடியாக வடிகால் வசதி ஏற்படுத்தி நீரினை வடித்து, வேர்ப்பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்கச் செய்தல் வேண்டும்.

2. மழைக்காலங்களில் உரம் இடுதல், பூச்சி மருந்து தெளித்தல், களைக்கொள்ளி இடுதல் போன்றவற்றை தவிர்த்திட வேண்டும்.

3. போதிய சூரிய வெளிச்சம் தென்பட்டவுடன் ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன், 1 கிலோ ஜிங்க் சல்பேட் உரங்களை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலம் இலை வழி உரமாக தெளித்தல் வேண்டும்.

4. தூர் வெடிக்கும் பருவத்தில் ஊட்டச்சத்து பற்றாக்குறை தென்பட வாய்ப்புள்ளது. இதனை நிவர்த்தி செய்ய மழை நின்று, நீர் வடிந்த பிறகு ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம் இவற்றுடன் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து, ஒரு இரவு முழுவதும் வைத்து 17 கிலோ பொட்டாசியத்துடன் கலந்து வயலில் இடுதல் வேண்டும்.

5. மழைக்காலத்தில் புகையான் பூச்சி தாக்குதல் பொருளாதார சேத நிலைக்கு மேல் செல்லும் பொழுது வேம்பு சார்ந்த பூச்சி மருத்தாகிய அசாடிராக்டின் 0.03% மருந்தினை வேளாண் துறையின் பரிந்துரையின்படி உபயோகப்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சம்பா பருவத்திற்கான பயிர் காப்பீடு செய்திட 30.11.2024 அன்று கடைசி நாள் என்பதால், விவசாயிகள் உடனயயாக பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola