உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்காக தமிழ்நாடு அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவர்களை மீட்பதற்காக சிறப்பு உதவிக்குழுவையும் தமிழக அரசு அமைத்துள்ளது. அவர்களை மீட்பது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் மற்றும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசு அவர்களை மீட்பதற்கான செலவையும் ஏற்று வருகிறது. 




உக்ரைனின் அண்டை நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் அவர்களின் தொடர்புகளை பயன்படுத்தி போரால் சிதைந்துள்ள உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை இன்று 35 மாணவர்களுக்கு போர் பகுதியில் இருந்து அண்டை நாட்டிற்கு வருவதற்கான பேருந்து கட்டணம் ரூபாய் 17 ஆயிரத்து 500 டாலர்களை அதாவது இந்திய மதிப்பில்  சுமார் ரூபாய் 14 லட்சத்தை தமிழ்நாடு அரசே செலுத்தியது. 




இன்று டெல்லியில் இருந்து சென்னை திரும்புவதற்கு தனி விமானத்தை அமர்த்தி உடனடியாக மாணவர்கள் வரவழைக்கப்பட்டனர். உக்ரைனில் தமிழக மாணவர்கள் மீட்பதற்கான சிறப்பு குழு இதில் சிறப்பு தொடர் கவனம் செலுத்தி பணியினை விரைவுபடுத்திக் கொண்டிருக்கிறது. இப்பணிக்கு என்று இதுவரையில் மூன்றரை கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையத்தின் நிதியை பயன்படுத்தி உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை விரைவுப்படுத்துமாறு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண