பொறியியல் பட்டதாரி கொகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. 5 பேர் விடுதலை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. தண்டனை விவரங்கள் வரும் 8 ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரில் இருவர் உயிரிழந்த நிலையில் 15 பேர் மீது விசாரணை நடைபெற்று வந்தது. அதில், 5 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 10 பேர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான தண்டனை விவரம் வரும் 8ஆம் தேதி வழங்கப்படுகிறது. குற்றவாளிகள் மற்றும் விடுதலை செய்யப்பட்டவர்கள் முழு விவரங்கள் வெளியாகியுள்ளது. 


 






 



மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Local Body Election 2022 தேனி : காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை திமுக கைப்பற்றியதால், சாலை மறியல் செய்து ஆர்ப்பாட்டம்


இந்நிலையில் மதுரை நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களின் சில கேள்விக்கு வழக்கறிஞர் ப.பா.மோகன் பதில் அளித்தார். அப்போது அரசு உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியதா என கேள்வி எழுப்பினர் அதற்கு அவர்..,” ஒரு அரசு வழக்கறிஞரை காட்டிலும் எனக்கு அதிக ஊதியம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை எனக்கு அரசு சார்பில் எதுவும் கொடுக்கவில்லை. ஒரு முறை நீதிமன்றம் வந்து செல்ல எனக்கு 6 ஆயிரம் செலவாகிறது ; டோல் கேட்டுக்கு கூட பாஸ் கொடுக்கமாட்டாங்க. ஆனால் அது முக்கியமில்லை. நான் ஒரு கம்யூனிஸ்ட் வழக்கறிஞர் என்பதால் இது எனது சமூக கடமையாக செய்து முடித்திருக்கிறேன்”. என்றார் 


தமிழக அரசு சமூக நீதி வழக்கறிஞராக விளங்கும் ப.பா மோகனு உரிய ஊதியம் அளித்து கவுரவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்