கொரோனா நிவாரணம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”தமிழ்நாடு அரசின் சார்பில் கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்களுக்கு ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) நிதி உதவி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  அதனடிப்படையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்கள் அரசின் இழப்பீட்டு உதவித் தொகை பெறுவதை எளிமையாக்கும் வகையில் https://www.tn.gov.in என்னும் தமிழ்நாடு அரசு இணையதள முகவரியில் “வாட்ஸ் நியூ (what's new) பகுதியில்  “Ex-Gratia for Covid-19” என்னும் விண்ணப்பத்திற்கான இணைப்பை தேர்வுசெய்து,    ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பம் செய்து உதவித் தொகை பெறலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது” என அறிவிக்கப்பட்டுள்ளது


மேலும் படிக்க : Cho Ramaswamy: “ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது” - அரசியலில் யாரையும் விட்டுவைக்காத சோ ராமசாமி!


 









 


மேலும் படிக்க :‛தவறான புரிதல்... கமலிடம் எந்த விளக்கமும் கேட்கத்தேவையில்லை’ - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்!


முன்னதாக, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்தது. இந்த கோரிக்கையை முன்னெடுத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் விசாரணைப்படி  கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க உரிய நெறிமுறைகளை வகுக்க வேண்டுமெனவும், இழப்பீடாக வழங்கப்படும் தொகையை மத்திய அரசே நிர்ணயிக்கலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


 


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


 


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


 


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


 


 


யூட்யூபில் வீடியோக்களை காண  


அதன்படி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு  வெளியிட்டது. அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடியாக நிவாரணம் வழங்க அரசு அறிவுறுத்தியது. இந்நிலையில் தற்போது நிவாரணம் பெறுவது எப்படி என அறிவிப்பு வெளியிட்டுள்ளது