தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் மாதம் கூடியபோது ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்த்தப்படும், சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களுக்கு முன்மாதிரி கிராம விருது வழங்கப்படும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் உறுதி செய்யும் பொருட்டு நீரின் தரத்தை பரிசோதிப்பதற்காக சுய உதவி குழு பெண்களுக்கு பயிற்சி அளித்தல், ஊரக நிர்வாகத்தில் உள்ள கணக்குகள் பதிவேடுகள் மற்றும் படிவங்கள் எளிமைப்படுத்தபட்டு முறைப்படுத்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்டார்.
இந்நிலையில் ஊராட்சித் தலைவர்களுக்கான மதிப்பூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதற்குரிய அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், “ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநரிடமிருந்து கருத்து பெறப்பட்டது. கிராம ஊராட்சிகளில் கிராம ஊராட்சி தலைவர்கள் அவ்வூராட்சியின் நிர்வாக அலுவலர் என்கிற முறையில் கிராம ஊராட்சியில் நடைபெறும் மாநில அரசு திட்டங்கள் மற்றும் மத்திய அரசு திட்டங்கள் ஆகியவற்றை முழுமையாக செயல்படுத்திடும் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர்.
ஊராட்சிகளால் மேற்கொள்ளப்படும் அத்தியாவசியப் பணிகளான குடிநீர் வழங்குதல்,தெரு விளக்குகள் அமைத்து பராமரித்தல், சாலை வசதிகள் ஏற்படுத்துதல், சுகாதாரத்தினை மேம்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டுவருகின்றனர் என ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994ன் பிரிவு 82ல் மேற்கொள்ளப்பட்ட ஊராட்சிகள் திருத்த சட்டம் 2012ன் படி கிராம ஊராட்சி தலைவர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியத்தை காலத்திற்கேற்ப அரசு நிர்ணயிக்கும் விகிதத்தில் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஊராட்சித் தலைவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Maanaadu Review : ’வந்தான், வென்றான், சிம்பு’ மாநாடு படம் எப்படி இருக்கு..?
20வது ஆண்டை நெருங்கும் சிம்பு: 11 ஆண்டுகளுக்குப் பின் வெற்றியை ருசித்த சோகம்.. எங்கே சறுக்கினார்?
Shiva Shankar Health: சிவசங்கர் மாஸ்டரின் சிகிச்சைக்கு நிதியுதவி - சோனு சூட் உறுதி