தமிழ்நாட்டில் பொது இடங்களில் மாஸ்க் போடாவிட்டால் 500 ரூபாய் அபராதம் வசூலிக்க மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.


வட இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் டெல்லி, பஞ்சாப், மகாராஷ்டிரா  உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் மாஸ்க் அணிய வேண்டும் என்றும், தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் கொரோனா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழ்நாட்டில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த இரு தினங்களாக அதிகரித்து வருகிறது. சென்னை ஐஐடியில் 30 மாணவர்களுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


 






இந்த நிலையில், கொரோனா தொற்று பரவலை தடுக்க மாநில அரசு முன்வந்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் பொது இடங்களில் மாஸ்க் போடாவிட்டால் 500 ரூபாய் அபராதம் வசூலிக்க மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டில் பொதுஇடங்களில் மாஸ்க் அணியாதவர்களிடம் 500 ரூபாய் வசூலிக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். பொது இடங்களில் மாஸ்க் அணியத் தேவையில்லை என்று எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. மக்கள் தொடர்ந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கல்வி நிறுவனங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் சுய மருத்துவ கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் தேவைப்பட்டால் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா அதிகரிப்பதால் பதற்றம் அடைய தேவையில்லை என மத்திய அரசே கூறியுள்ளது. சென்னை ஐஐடியில் கொரோனா உறுதியான மாணவர்களின் உடல்நிலை சீராக இருக்கிறது.  ஐஐடியில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.


மேலும் படிக்க: Covid 19 4th Wave: மெல்ல அதிகரிக்கும் கொரோனா... 4ஆம் அலை தொடக்கமா? பாதிப்பு எப்படி இருக்கும்?


மேலும் படிக்க: Corona in TN: மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. முகக்கவசம் அவசியம்.. எச்சரிக்கை செய்யும் தமிழக அரசு!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண