Tamilnadu Covid Update: தமிழ்நாட்டில் படிப்படியாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று; 500-ஐ தாண்டிய பாதிப்பு

தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று, ஒரெ நாளில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500 தாண்டியது.

Continues below advertisement

தமிழ்நாட்டில் இன்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு 531ஆக அதிகரித்துள்ளது

Continues below advertisement

இன்றைய பாதிப்பு:

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 531 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,507 ஆக உள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35.82 லட்சத்திற்கு மேல் உள்ளது.

மாவட்டங்கள் நிலவரம்:

அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 98 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 51 பேரும் கொரோனா தொற்றால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழப்பு:

தமிழ்நாட்டில் இன்று யாரும் கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 046ஆக உள்ளது.

Also Read: ஆயுத பூஜையை முன்னிட்டு நெரிசலை தவிர்க்க 2 நாட்களுக்கு கூடுதல் பேருந்து நிலையங்கள் குறித்த அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement