1,40,091 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,329 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 171 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 15 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இருவர் உயிரிழப்பு. மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 1669 ஆக உள்ளது. மேலும் 62 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை சேலம் மாவட்டத்தில் 96,400 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 98,654 ஆக உயர்வு. மாவட்டத்தில் 583 பேர் கொரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவான படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் உள்ளனர். சேலம் மாவட்டத்தில் நேற்று 54 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஆயிரத்திற்கும் குறைவான கொரோனா நோய் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மாதம்வரை கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் அது கடந்த சில வாரங்களாக படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது இதுவரை மாவட்டத்தில் 54 ஆயிரத்து 563 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 53 ஆயிரத்து 640 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 21 நபர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா தொற்றால் இன்று உயிரிழப்பு இல்லை . இதுவரையில் கொரோனா தொற்றால் இறந்தவர்கள் 665-ஆக உயர்ந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸ் தொற்று 500 க்கும் மேற்பட்ட எண்ணிக்கைகளில் நாள்தோறும் பதிவாகிவந்தது. தற்போது படிப்படியாக குறைந்து வந்த நிலையில் இன்று மட்டும் 12 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பதிவை விட ஒருவருக்கு தொற்று குறைவு
சென்னையில் 171 பேரும், கோயம்புத்தூரில் 132 பேரும், செங்கல்பட்டில் 99 பேரும், ஈரோட்டில் 78 பேரும், தஞ்சாவூரில் 66 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த மாவட்டங்களில் நேற்றைய பாதிப்பை விட இன்று சற்றுக்குறைந்துள்ளது.