தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்திடம் 1. 78 லட்சம் டன் நிலக்கரி கையில் இருப்பதாகவும், மேலும், துறைமுகம், போக்குவரத்து வழித்தடங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில் உள்ள நிலக்கரி கையிருப்பைக் கொண்டு, அடுத்த 11 நாட்களுக்கு தமிழகத்தில் மின்உற்பத்தி பாதிக்கப்படாது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.
மேலும், நிலக்கரி பற்றாக்குறையை சரிசெய்ய, வெளிச்சந்தையில் ரூபாய், 17-க்கு 15 மில்லியன் மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்யும் நடவடிக்கையயும் மேற்கொண்டுள்ளது.
நிலக்கரி பற்றாக்குறை:
நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு பூதாகரம் எடுத்துள்ளது. நிலக்கரி சுரங்கங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக இந்தியாவில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி கடந்த சில மாதங்களாக கடுமையாக பாதிக்கப்பட்டது.
கொரோனா ஊரடங்கு காரணமாகவும் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யக்கூடிய 135 மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக இந்த மின் நிலையங்கள் ஒன்றன் பின் ஒன்றாக விரைவில் மின் உற்பத்தியை நிறுத்த வேண்டிய அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்தியா கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக்குறைவான அளவிலேயே வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்திருக்கிறது. இதுவும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதே சமயம் உலகளவில் நிலக்கரி விலை 40% அதிகரித்துள்ளது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் 70% நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்படுவது தான்.
மின் தேவை அதிகரிப்பு:
மத்திய மின்சார ஆணையத்தின் (CEA) தகவல்படி, நிலக்கரி சார்ந்த மின்சார உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உதார்ணமாக, 2021-2022 நிதியாண்டின் முதல் காலாண்டில் நிலக்கரி சார்ந்த மின்சார உற்பத்தி கடந்தாண்டு அதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 29 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
ஆண்டு |
காலாண்டு |
நிலக்கரி சார்ந்த மின்சார உற்பத்தி (BU) |
2020-21 |
1st (ஏப்ரல் -ஜூன் ) |
198.9 |
2nd (ஜூலை -செப்டம்பர்) |
230.3 |
|
3rd (அக்டோபர் -டிசம்பர் ) |
244.4 |
|
4th (ஜனவரி -மார்ச் ) |
277.3 |
|
2021-22 |
1st (ஏப்ரல் -ஜூன்) (*) |
256.7 |
இது ஒருபுறமிருக்க, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இந்தியாவில் மின்தேவை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும், 124 Billion Unit மின்தேவை ஏற்பட்டுள்ளது. இது கடந்த 2019 ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்ட மின் தேவையை விட 18-20%. சதவீதம் அதிகம். கடந்த ஜூலை 7ம் தேதி 12.01 மணிக்கு, இதுவரை இல்லாத அளவில், அதிகளவிலான மின் தேவையை நாடு கண்டது. மின் தேவை 200570 மெகா வாட். இது கடந்த 2020 ஜூலை 2ம் தேதி 22.21 மணி அளவில் ஏற்பட்ட மின் தேவையை விட 17.6 சதவீதம் அதிகம். அக்டோபர் மாதம் 4ம் தேதி 1,74,000 MW மின்தேவை ஏற்பட்டது. இது, அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 15,000 மெகா வாட் அதிகமாகும்.
எனவே, இந்தியாவில் மின்சார உற்பத்தி நிலக்கரி சார்ந்தே இருப்பதாலும், வரலாற்றில் இல்லாத அளவு மின்சார தேவையை நாடு கண்டு வருவதால் நிலக்கரி பற்றாக்குறை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு: இதற்கு தமிழ்நாடும் விதிவிலக்கு அல்ல. மத்திய அரசால் நடத்தப்படும் கோல் இந்தியா நிறுவனத்திடம் இருந்து தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிலக்கரி கடந்த செப்டம்பர் மாதம் முதல் சரிபாதியாக சரிந்துள்ளது. தமிழ்நாட்டில் வடசென்னை, தூத்துக்குடி, மேட்டூரில் உள்ள 5 அனல் மின் நிலையங்களில் இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அனல் மின்நிலையங்களுக்கு தினசரி 60,265 டன் நிலக்கரி தேவைப்படுகிறது. ஆனால், மத்திய அரசிடம் இருந்து 36,255 டன் நிலக்கரி மட்டுமே தமிழ்நாட்டுக்கு கிடைத்து உள்ளது. கடந்த 8 ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டில் நிலக்கரி கையிருப்பு 1.78 லட்சம் டன் மட்டுமே உள்ளது.