சென்னை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக விளங்குவது பூண்டி, புழல் ஏரி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள். இவற்றில் மிகவும் முக்கியமான நீர் ஆதாரமாக விளங்குவது பூண்டி ஏரி. இந்த ஏரியின் மொத்த உயரம் 35 அடி ஆகும். இதன் முழு கொள்ளவு 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடியாகும். இன்று காலை நிலவரப்படி நீர் இருப்பு 33.95 அடியாகவும் கொள்ளளவு 2 ஆயிரத்து 807 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான்வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
“ பூண்டி ஏரியில் இருந்து அணையின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பிற்பகல் 2 மணியளவில் விநாடிக்கு 1000 கன அடி உபரி நீர் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில் கூடுதல் உபரிநீர் படிப்படியாக திறக்கப்படும்.
எனவே, நீர்த்தேக்கத்தில் இருந்து மிகை நீர் வெளியேறும் கொசஸ்தலை செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனூர் ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூர், சீமாவரம், வெள்ளிவாயல் சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி, மணலிபுதுநகர்.
சடையான்குப்பம், எண்ணூர் மற்றும் கொசஸ்தலையாற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும் மேலும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 1,691 கன அடியாக உள்ளது. தற்போது பருவமழையினால் நீர்வரத்து தொடர்ச்சியாக அதிகரித்து உள்ளதால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. எனவே, அணையின் நீர்மட்டம் விரைவில் 34 அடியை எட்டியை விடும் என்று எதிர்பார்ககப்படுகிறது.
மேலும் படிக்க : Tamilnadu billionaires : இந்தியாவின் டாப் 100 செல்வந்தர்கள் பட்டியலில் இருக்கும் ஐந்து தமிழர்கள் இவர்கள்தான்..
அம்மப்பள்ளி அணை திறக்கப்பட்டுள்ளதால் அந்த நீரும் வந்து கொண்டு இருப்பதால் அணையில் இருந்து இன்று மதியம் 2 மணி முதல் உபரிநீர் திறக்கப்படுகிறது. இதையொட்டி கொசஸ்தலை ஆற்றின் கரையோர உள்ள மக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஏரிகள், குளங்கள், அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Biggboss Tamil 5 | அடிச்சாண்டா அப்பாய்ண்ட்மென்ட் ஆர்டர்.. பிக்பாஸில் பூத்த அக்கா-தம்பி செண்டிமெண்ட்..!