9 நாட்களுக்கு பின்னர் சடலமாக மீட்பு:


 


சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பர் கோபிநாத்துடன் இமாச்சல பிரதேசத்துக்கு சென்றார்.  அங்கு சென்ற போது கடந்த 4 ஆம் தேதி மலைப்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து, சட்லஜ் நதியில் விழுந்தது. இதில் கார் ஓட்டுநர தஞ்ஜின் இறந்தார்.


கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். காணாமல் போன வெற்றி துரைசாமியை தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே, கடந்த 9 நாட்களுக்கு பின்னர் வெற்றி துரைசாமியின் உடல்  விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து இரண்டு கி.மீட்டர் தொலைவில் சடலமாக மீட்கப்பட்டது.  இதனையடுத்து வெற்றி துரைசாமியின் உடல் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் இன்று அதாவது பிப்ரவரி 13 மாலை சென்னை கொண்டு வரப்பட்டது.


அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்:


சென்னை சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் வெற்றி துரைசாமியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.வெற்றி துரைசாமி உடலுக்கு முதல்வர் மு..ஸ்டாலின் நேரில் சென்று  மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோரும் சென்று அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பின்னர் சைதை துரைசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.






வெற்றி துரைசாமி உடலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசர்,  சசிகலா, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மற்றும் திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்தினார்கள்.


 


மேலும் படிக்க: Jasprit Bumrah: கிண்டல் செய்த நபர்.. பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன் கொடுத்த பதிலடி!


 


மேலும் படிக்க: IPL 2024: ஹர்திக் பாண்டியாவின் இடத்தை தமிழக வீரர் விஜய் சங்கர் நிரப்புவார் - சுனில் கவாஸ்கர்!