தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  


மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  


27.07.2023 முதல் 30.07.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: 


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 சென்னையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று மாலை கரு மேகங்கள் சூழ்ந்து காணப்பட்ட நிலையில் நகரின் பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியுள்ளது. மடிப்பாக்கம், மேற்கு தாம்பரம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. அதேபோல் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, சின்னமலை, அடையாறு, மத்திய கைலாஷ் உளிட்ட பகுதிகளில் நல்ல மழை பதிவானது.  


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லிமீட்டரில்):


 வால்பாறை (கோயம்புத்தூர்) 55.0, மீனம்பாக்கம் (சென்னை) 25.9, நுங்கம்பாக்கம் (சென்னை) 9.5, திருப்பத்தூர் (திருப்பட்டூர்) 7.0, தர்மபுரி 4.0, சேலம் 4.0, கடலூர் 4.0, கோயம்புத்தூர் 3.0 மிமீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல், மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) 30.5, ஒய்எம்சிஏ நந்தனம் (சென்னை) 30.0, பூந்தமல்லி (திருவள்ளூர்) 21.5, பள்ளிக்கரணை (சென்னை) 20.1, சத்தியபாமா பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம்) 20.0அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 17.5, புழல் (திருவள்ளூர்) 8.5 மிமீ மழை பதிவாகியுள்ளது.   


நீதிமன்றங்களில் அம்பேத்கர் படம் நீக்கப்படாது: தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு செவிசாய்த்த தலைமை நீதிபதி


TN Weather Update: அலெர்ட்! வங்கக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. 5 மாநிலங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!