முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், பட்ஜெட் தாக்கல் குறித்தும், துறை வாரியாக நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.


இந்த நிலையில், தமிழ்நாடு பட்ஜெட் வரும் 13ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது என்று பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். 


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து முடிவு செய்யப்பட்டது. ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார். தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றபின் முதன்முதலாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Online Rummy Games: ஆன்லைன் ரம்மிக்கு தடை: வருகிறது புதிய சட்டம்! - அமைச்சர் தகவல்


அன்றைய தினத்தில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் என தனித்தனியாக தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தேர்தலில் அளித்த சில வாக்குறுதிகளை நிறைவேற்றியது. இந்த பட்ஜெட்டின் போது, இன்னும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்து அறிவிக்க வாய்ப்புள்ளது. முக்கியமாக குடும்ப தலைவிக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது குறித்து இந்த பட்ஜெட்டில் வெளியாகும் என்று பல குடும்பத்தார்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.


 






 


பட்ஜெட் தொடர்பாக பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: 


தமிழ்நாடு ஆளுநர் இந்திய அரசமைப்பு, பிரிவு 174 (1)-ன் கீழ், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தை, 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 13-ஆம் நாள், வெள்ளிக்கிழமை, காலை 10.00 மணிக்கு சென்னை-600 002, வாலாஜா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டம், கலைவாணர் அரங்கம், மூன்றாவது தளத்தில் உள்ள கூட்டரங்கத்தில் கூட்டியுள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். 


தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 181(1)-ன்கீழ், 2021-2022-ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையினை 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 13-ஆம் நாள், வெள்ளிக்கிழமை, அன்று பேரவைக்கு அளிக்க வேண்டுமென்று  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் 'நாள்' குறித்துள்ளார்கள். 2021-2022-ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 13-ஆம் நாள், வெள்ளிக்கிழமை, காலை 10.00 மணிக்கு பேரவைக்கு அளிக்கப்பெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற