Breaking LIVE : தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் லைவ் ப்ளாக்கில் கீழே அறிந்துகொள்ளலாம்.

ABP NADU Last Updated: 16 Nov 2021 12:35 PM
நவ.19ம் தேதி அமைச்சரவைக் கூட்டம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நவ.19ம் தேதி அமைச்சரவைக் கூட்டம்


மழை, வெள்ளப் பாதிப்பு குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்பு  

ஜெய்பீம் பட விவகாரம்: நடிகர் சூர்யாவுக்கு இயக்குநர் வெற்றிமாறன் ஆதரவு


தமிழ் சமூகத்தால் கொண்டாடப்பட வேண்டிய படைப்பாளி நடிகர் சூர்யா - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி


அனைத்து கல்லூரிகளிலும் இனி நேரடியாக செமஸ்டர் தேர்வு நடைபெறும் - உயர்கல்வித்துறை


கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது அறிவிப்பு


நரிக்குறவர் நல வாரியத்தில் பதிவு செய்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு திருமண உதவித் தொகையை உயர்த்தி அரசாணை வெளியீடு


Breaking News: நவ.20ல் தோனிக்கு சென்னையில் பாராட்டு விழா!


Valimai Cement: அம்மா சிமெண்ட்தான் ‘வலிமை’ சிமெண்ட்?


Valimai Cement Price : 'வலிமை ஒன்று' - விலை இரண்டு!

தற்போதையை மூலப்பொருட்களின் விலை அடிப்படையில் சிமெண்ட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Jai Bhim Issue: திரைத்துறை விட்டு விடுங்கள்; யாருக்கு பயந்து படம் எடுக்க வேண்டும் என தெரியவில்லை - இயக்குநர் பாரதிராஜா


Tamil Nadu Flood Relief: மழை, வெள்ள பாதிப்பு - தமிழ்நாடு அரசு ரூ.300 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் மழை, வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள், வடிகால்களை சீரமைக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு

Tamil Nadu Weather Latest Update: தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு


'எம்.ஜி.ஆர். ஆட்சியிலேயே தமிழ்நாட்டின் உரிமை விட்டுக் கொடுப்பு'

எம்.ஜி.ஆர். ஆட்சியிலேயே முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகள் விட்டுக் கொடுக்கப்பட்டன. நீர் ஆதராங்களை பாதிக்கும் புதிய அணைகளை கேரளா, கர்நாடகா கட்ட அனுமதிக்க மாட்டோம் - அமைச்சர் துரைமுருகன் 

லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் எஸ்.பி. நல்லம நாயுடு மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்


தமிழ்நாடு அரசின் வலிமை சிமெண்டை அறிமுகப்படுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்


எனது வாட்சுகளின் விலை ரூ.1.5 கோடி; ரூ.5 கோடி என தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகின்றன - ஹர்திக் பாண்ட்யா


Vanniyar Reservation: வன்னியருக்கான 10.5% இடஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு


வன்னியருக்கான 10.5% இட ஒதுக்கீடு ரத்தை எதிர்த்து மேல் முறையீடு செய்தது தமிழக அரசு

 


வன்னியர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட 10.5 % உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு


வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு சரியானது அல்ல என கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்திருந்தது

இது சீன் 2 .. அடுத்த இரண்டு நாட்கள் கனமழை குறித்து வெதர்மேனின் அதிரடி அப்டேட்

இது சீன் 2 .. அடுத்த இரண்டு நாட்கள் கனமழை குறித்து வெதர்மேனின் அதிரடி அப்டேட்


Background

வடக்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வரும் 18-ந் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழக பகுதிகளில் நிலவக்கூடும். இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், நாளை மற்றும் நாளை மறுதினம் சென்னையில் மீண்டும் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.