நடப்பாண்டிற்கான சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. வழக்கமாக, தமிழ்நாட்டில் சட்டசபை கூட்டத்தொடர் தமிழ்நாடு ஆளுநர் உரையுடன் தொடங்குவதே மரபு ஆகும். தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது.


ஜன கன மண பாடுவோம்:


இந்த நிலையில், இன்று காலை சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. வழக்கமாக, தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கும் உரையை ஆளுநராக பதவி வகிப்பவர்கள் வாசிப்பது மரபு. ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசின் உரையை படிக்காமல் புறக்கணித்தார். மேலும், அவை தொடங்கும் முன்பே தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கூறினார்.


இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்து முடித்த பிறகு, ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டார். அப்போது, சபாநாயகர் அப்பாவு இருங்க.. இனிதான் ஆளுநர் ஜனகனமண பாடுவோம் என்று கூறினார். இதனால், அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.


புறக்கணித்த ஆளுநர்:


இதுவரை தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் தொடங்கும் முதல் கூட்டத்தொடரை ஆளுநராக பொறுப்பு வகிப்பவரே தமிழ்நாடு அரசு தயாரித்து தரும் உரையை வாசித்து கூட்டத்தொடரை தொடங்கி வைப்பார். அதன்படியே, நடப்பாண்டும் உரையை வாசித்து கூட்டத்தொடரை தொடங்கி வைக்க ஆளுநர் வந்தார்.


ஆனால், அவர் தமிழ்நாடு அரசு தயாரித்து தந்த ஆளுநர் உரையை முழுவதும் படிக்காமல் புறக்கணித்தார். தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை தர வேண்டும், உரையின் தொடக்கத்திலும், இறுதியிலும் பாட வேண்டும் என்றும், தமிழக அரசு தயாரித்து வழங்கிய உரையை உண்மையின் அடிப்படையிலும், தார்மீக அடிப்படையிலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதால் நான் படிக்கவில்லை. இதனால், எனது சட்டசபை உரையை நான் முடித்துக் கொள்கிறேன் என்றார்.


ஆளுநர் இவ்வாறு பேசியதைத் தொடர்ந்து தமிழக சபாநாயகர் ஆளுநர் உரையை தமிழில் வாசித்தார். அதை அவர் முழுவதுமாக வாசித்ததுடன், சாவர்க்கர் மற்றும் கோட்சே வழியில் வந்த உங்களுக்கு தமிழ்நாடு சட்டமன்றமும், தமிழ்நாடு மக்களும் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்று சட்டசபையிலே கூறினார்.


ஆளுநர் பதிவு செய்யாத உரையை பதிவு செய்வதற்கான தீர்மானத்தை, அவை முன்னோரும், அமைச்சருமான துரைமுருகன் வாசித்தார். அப்போதுதான் ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார்.


மேலும் படிக்க: தேசிய கீதத்தை புறக்கணித்ததாக குற்றச்சாட்டு.. உரையை படிக்க மறுத்த ஆளுநர்!


மேலும் படிக்க: Bihar Trust Vote : பரபரப்பு! நிதிஷ்குமார் அரசு நீடிக்குமா? கவிழுமா? பீகாரில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு