கோவை ஹோப்காலேஷ் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் கொரோனா காலக் கட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய முன்களப் பணியாளர்கள் சிறப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்திரராஜன் கலந்து கொண்டார். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவ குழுவினரிடம் தமிழிசை சவுந்திரராசன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,  ”இந்தியாவில் இதுவரை 104 கோடியே 4 லட்சத்து 99 ஆயிரத்து 873 தடுப்பூசி போடப்பட்டுள்ளது மிகப் பெரிய சாதனை. கொரோனா தடுப்பூசி மற்றும் தடுப்பூசி பணிகளில் மத்திய அரசு சிறப்பாக பணியாற்றி வருகிறது. மேலும் மாநில அரசுகள் சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கியது. கொரோனா பணிகளில் அரசியல் விமர்சனங்கள் கூடாது.  புதுச்சேரி ஆளுநராக இருந்தாலும் அங்கிருந்து 30 சதவீதம் ஆக்ஸிஜன் தமிழகத்திற்கு வழங்கினோம்.


மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கண்டிப்பாக கொரோனா வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஆளுநர் அரசாங்கத்திடம் தகவலை பெறலாமா? என விமர்சனம் எழுந்தது.  தமிழகத்தில் அனைத்தும் அரசியல் ஆக்கப்படுகிறது. நவம்பர் 11 ஆம் தேதி டெல்லியில் ஆளுநர் மாநாடு  நடக்கிறது. மத்திய அரசுக்கு அனைத்து ஆளுநர்களும் தகவலாக வழங்க வேண்டும். அதனால் தான் ஆளுநர்கள் தகவல்களை பெற்றுள்ளோம். நானும் தெலுங்கானா, புதுச்சேரி மாநில தகவல்களை பெற்றுள்ளோன். ஆளுநருக்கு தகவல் அளிக்கும் விவகாரத்தில் விமர்சனங்கள் எழுந்த போது, தமிழக அரசு சரியாக அனுகியது. ஆனால் அரசியல் கட்சிகள் மட்டுமே அனைத்தையுமே விமர்சனம் செய்து வருகின்றனர்.


இந்த தகவல் பெறும் விவகாரத்தில் தெலுங்கானா, புதுச்சேரி அரசுகள் முழுமையான ஒத்துழைத்துள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் சட்டம் ஒழுங்கும் கட்டுக்குள் உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு தமிழகத்தில் முறையாக கடைபிடிக்கப்படவில்லை.  ஆனால் புதுச்சேரியில் இந்த பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். இதற்காக உச்ச நீதிமன்றத்தில் கால அவகாசம் கோரி உள்ளோம். தமிழகத்தில் திமுக ஆட்சி குறித்து ரிப்போர்ட் கார்டு கொடுக்கும் அளவிற்கு நான் பெரிய ஆள் கிடையாது” என அவர் தெரிவித்தார்.


மேலும் படிக்க : எதிர் கட்சியாக பாய்ந்த திமுக... ஆளுங்கட்சியாக பம்மியதா...? ஆளுநருக்கு ரிப்போர்ட் தர சம்மதம்!


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


https://bit.ly/2TMX27X


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


https://bit.ly/3AfSO89


ட்விட்டர் பக்கத்தில் தொடர


https://bit.ly/3BfYSi8


யூடிபில் வீடியோக்களை காண


https://bit.ly/3Ddfo32