அண்மையில் தமிழ்நாட்டில் ஏழு கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் தாங்கள் மஞ்சள் எறும்புகளின் தொல்லையால் தத்தளிப்பதாகக் புகார் கூறியிருக்கிறார்கள்.


இந்தப் பூச்சிகள், தங்கள் கால்நடைகளைத் தாக்கி, பயிர் விளைச்சலைப் பாதித்து, தங்களின் வாழ்வாதாரத்தை ஆபத்தில் ஆழ்த்துவதாக அவர்கள் கூறுகின்றனர்.இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் தகவலின்படி, மஞ்சள் நிற எறும்புகள் உலகின் மிக மோசமான ஆக்கிரமிப்பு இனங்களில் ஒன்றாகும்.


அவை கடிக்காது அல்லது குத்துவதில்லை, ஆனால் ஃபார்மிக் அமிலத்தை தெளிப்பதால் எதிர்வினைகள் ஏற்படலாம்.


இந்த எறும்புகள் பொதுவாக வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளில் காணப்படும். அவை ஒழுங்கற்ற, ஒருங்கிணைக்கப்படாத வழியில் நகர்கின்றன, தொந்தரவு செய்யும் போது அவற்றின் இயக்கம் மிகவும் வெறித்தனமாக மாறும்.


வல்லுநர்கள் இந்த எறும்புகள் விரைவாக பெருகும் மற்றும் "பூர்வீக வனவிலங்குகளுக்கு அதிக அளவு சேதம் விளைவிக்கும்" என்று கூறுகிறார்கள். ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் இந்தப் பூச்சிகளின் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.


மஞ்சள் நிற எறும்புகள் குறித்து ஆராய்ச்சி செய்த பூச்சியியல் வல்லுநர் டாக்டர் ப்ரோனாய் பைத்யா, அவை "சந்தர்ப்பவாத இனங்கள்" என்கிறார்.






"அவர்களுக்கு உணவு விருப்பத்தேர்வுகள் எதுவும் இல்லை. அவர்கள் எதையும் மற்றும் எல்லாவற்றையும் சாப்பிடுகிறார்கள்," என்று அவர் கூறுகிறார். அவை மற்ற எறும்பு இனங்கள், தேனீக்கள் மற்றும் குளவிகளையும் வேட்டையாடுகின்றன.


தமிழகத்தில் இந்த வகை எறும்புகளால் பாதிக்கப்பட்ட கிராமங்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கரந்தமலை வனப்பகுதியைச் சுற்றியுள்ள மலைப் பகுதியில் அமைந்துள்ளன. இங்கு பெரும்பாலான மக்கள் விவசாயிகள் அல்லது கால்நடை உரிமையாளர்கள்.


வனப்பகுதிக்கு அருகில் சென்றவுடன் எறும்புகள் தங்கள் மீது ஏறி எரிச்சல், கொப்புளங்கள் உண்டாக்குகின்றன என்றும் அதுவும் எறும்பு மொய்ப்பதால் குடிக்க தண்ணீர் கூட எடுத்துச் செல்ல முடியவில்லை என்றும் என்ன செய்வது என்று தெரியவில்லை என்கின்றனர் அந்தப் பகுதி விவசாயிகள்.


இந்த எறும்புகளை கடந்த சில ஆண்டுகளாக காட்டில் பார்த்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர். ஆனால், இந்த எறும்புகள் கிராமங்களில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் தோன்றி, வாழ்க்கையைத் தூக்கி எறிவது இதுவே முதல் முறை.


காடுகளுக்கு அருகில் வசித்த மாடு மேய்ப்பவர்கள் இந்தத் தாக்குதல் காரணமாக தங்கள் குடியிருப்புகளை காலி செய்துவிட்டதாக கூறுகின்றனர்.


"என் வீட்டில் இந்த எறும்புகள் தொல்லை இருந்ததால், நான் வெளியேறி கிராமத்திற்கு வந்தேன். எங்களால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை, அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது," என்று எறும்புகளால் தாக்கப்பட்ட ஆடுகளை மேய்க்கும் நாகம்மாள் கூறுகிறார்.


உள்ளூர் வன அதிகாரி பிரபு கூறுகையில், "முழுமையான ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு" அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.அறிக்கை கிடைத்த பிறகே இது குறித்து கருத்து தெரிவிக்க முடியும் என்றார்.


அரசு கால்நடை மருத்துவர் டாக்டர் சிங்கமுத்து கூறுகையில், ”அந்த எறும்புகள் “சாதாரண எறும்புகள் போலவே இருக்கின்றன”.அவை ஏன் பரவுகின்றன என்று எங்களுக்குத் தெரியவில்லை. அவற்றை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது எங்களுக்கும் புரியவில்லை. மனிதர்கள் மற்றும் கால்நடைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு இதுதான் காரணம் என்று உறுதியாகக் கூற முடியாது", என்று அவர் கூறுகிறார். 


இதற்கிடையில், இந்த எறும்புகளின் தாக்குதலால் தங்கள் கால்நடைகள்,பாம்புகள் மற்றும் முயல்கள் கூட இறந்துவிட்டதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.