தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






இது தொடர்பான சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், “05.05.2024 முதல் 09.05.2024 வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்   பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 45-80% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 55-85% ஆகவும்  இருக்கக்கூடும். 


அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் , ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.” என்று தெரிவித்துள்ளது.


அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய  முன்னறிவிப்பு: 


05.05.2024 &  06.05.2024:


அடுத்த 2 தினங்களுக்கு தமிழக உள்  மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய   மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.


07.05.2024 முதல் 09.05.2024 வரை:


அடுத்த 3 தினங்களுக்கு அதிகபட்ச  வெப்பநிலை  2°  செல்சியஸ் வரை படிப்படியாக  குறையக்கூடும். 


05.05.2024 முதல் 09.05.2024 வரை:


அடுத்த 5 தினங்களுக்கு, தமிழக உள்  மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2°-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.


 05.05.2024 & 06.05.2024:


வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில்  அதிகபட்ச வெப்பநிலை 3°-5°  செல்சியஸ் இயல்பை விட மிக அதிகமாக இருக்கக்கூடும்.  


 05.05.2024 முதல் 09.05.2024 வரை:


அடுத்த 5 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 41°–43° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 39°–40° செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36°–38° செல்சியஸ் இருக்கக்கூடும்.


வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை: 


05.05.2024 & 06.05.2024:


வட  தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். 


இவ்வாறு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.