தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இன்றுடன் 100 டிகிரி பார்ன்ஹீட் வெப்பம் நிலை பதிவாவது முடிவுக்கு வரும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும், படிப்படியாக வெப்பநிலை குறைந்து மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 


இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,” சென்னை மாநகரத்தில் கடந்த சில நாட்களாகவே பயங்கரமாகவே வெப்ப அலை வீசுகிறது. கடந்த 15 ஆண்டுகளில் கடந்த 15 ஆண்டுகளில்  2023, 2019, 2012, 2008 ஆகியவை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளடக்கிய பகுதிகளில் வெப்பமான ஆண்டுகளாகக் கருதப்படுகிறது. கடந்த 2019 ம் ஆண்டுக்கு பிறகு மிகவும் மோசமான வெப்ப ஆண்டாக இந்தாண்டு பதிவாகியுள்ளது” என தெரிவித்துள்ளார். 


ஜூன் 17 (நாளை) வெப்பநிலை எப்படி இருக்கும்..? 


18.06.2023:  தமிழகத்தில்  ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.


மழைக்கு வாய்ப்பா..? 


தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,  அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால்,  அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


18.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில்  ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


19.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


20.06.2023 மற்றும் 21.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 


வங்கக்கடல் பகுதிகள்: 


18.06.2023 முதல் 21.06.2023 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 


18.06.2023: வடதமிழக கடலோரப்பகுதிகள், தென் ஆந்திர கடலோரப்`பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


18.06.2023 முதல் 21.06.2023 வரை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


அரபிக்கடல் பகுதிகள்:


18.06.2023 முதல் 21.06.2023 வரை: இலட்சத்தீவு பகுதிகள், கேரள - கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40  முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.