சென்னை, புதுக்கோட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தஞ்சாவூர் ஆகிய 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
2022 பருவமழை விவரம்:
புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், 2022க்கான வடகிழக்கு பருவமழைக்கான மழை கணக்கிடும் பணி, டிசம்பர் 31உடன் முடிவடைந்ததாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
2022ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை 477 மி.மீ பெய்தது. இது இயல்பை விட 45 சதவிகிதம் அளவுக்கு கூடுதலாகும். சென்னையில் 437 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பை விட 2 சதவிகிதம் அளவிற்கு கூடுதலாகும்.
இதே போல் வடகிழக்கு பருவமழை 445 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பை விட 01 சதவிகிதம் அளவிற்கு அதிகம். சென்னையில் 924 மி.மீ மழை பெய்தது. அதன்படி, சென்னையில் இயல்பை விட 14 சதவிகிதம் அளவிற்கு கூடுதல் மழை பெய்துள்ளது.
2022 ஜனவரி 1ம் தேதி முதல், டிசம்பர் 31ம் தேதி வரையிலான ஓர் ஆண்டின் முழு காலத்தில், தமிழ்நாட்டில் மொத்தம் 1,131 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பை விட 22 சதவிகிதம் அளவிற்கு அதிகமாகும். சென்னையில் இந்தாண்டு மொத்தம் 1,447 மி.மீ மழை பெய்துள்ளது இது இயல்பை விட 7% கூடுதலாகும்.
அதேநேரம், 2021ஆம் ஆண்டில் வழக்கத்தை விட 57 சதவிகிதம் அளவிற்கு கூடுதல் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் ஆண்டு சராசரி மழை அளவு 925 மி.மீ எனவும், சென்னையின் ஆண்டு சராசரி 1,350 மி.மீ எனவும் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Also Read: மேட்டூர் அணையின் நீர் வரத்து 4,081 கன அடியில் இருந்து 3,942 கன அடியாக குறைவு…