தமிழ்நாடு:
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் - ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் குறித்து ஆலோசனை
- இந்தியா முழுவதும் ஒரு செயல் திட்டம் இருந்தால் தமிழகம் அதனை வேண்டாம் என சொல்கிறது - காசி தமிழ் சங்கமம் அமைப்பாளர்களுக்கான பாராட்டு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
- கொரோனா கால ஒப்பந்த செவிலியர்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி - சென்னையில் இன்று உண்ணாவிரத போராட்டம்
- அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணை - இந்த வாரத்தில் விசாரணையை முடிக்க விரும்புவதாக நீதிபதிகள் கருத்து
- சென்னை தீவுத்திடலில் சுற்றுல பொருட்காட்சி தொடக்கம் - 27 துறை சார்ந்த பிரத்யேக அரங்குகள் அமைப்பு
- மாரடைப்பால் காலமான ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
- சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்ட தொடர்பான மசோதாவுக்கு ஆளுநர் கையெழுத்திட மறுப்பது ஏன்? - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி
இந்தியா:
- தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்துக்கு ரூ.19,744 கோடி ஒதுக்கீடு - பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
- மேற்கு வங்கத்தில் 4 பேருக்கு ஒமிக்ரான் BF.7 தொற்று பாதிப்பு - அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள் என தகவல்
- மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த 1800 வீரர்கள் காஷ்மீருக்கு அனுப்பி வைப்பு - பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வருவதால் மத்திய அரசு நடவடிக்கை
- மத்திய அரசின் கொள்கைகளால் விவசாயிகளின் வருமானம் குறைந்துள்ளது - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு
- சபரிமலையில் நாளுக்கு நாள் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
- இந்தியாவில் 5.50 கோடி மக்கள் கொடிய பூஞ்சை தொற்றால் பாதிப்பு - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
உலகம்:
- பாகிஸ்தானில் சிலிண்டர் தட்டுப்பாடு: பிளாஸ்டிக் பைகளில் கியாஸ் நிரப்பி செல்லும் பொதுமக்கள்
- சவுதி அரேபியாவில் கனமழை - மெதினா நகரில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 2 பேர் பலி
- விண்வெளிக்கு சென்று வந்த முதல் அமெரிக்க விண்வெளி வீரர் வால்டர் கன்னிங்ஹாம் வயது மூப்பால் மறைவு
- மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் நாட்டு நாடாளுமன்றத்தில் கர்ப்பிணி எம்.பி.யை எட்டி உதைத்த 2 எம்.பி.க்களுக்கு 6 மாதம் சிறை
- ஜனவரி 1 முதல் 3 ஆம் தேதி வரையிலான முதல் 3 நாட்களில் அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 130 பேர் பலி
சினிமா:
- விஜய் நடித்த வாரிசு படமும், அஜித் நடித்த துணிவு படமும் ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு
- தேர்தல் விதிமீறல் வழக்கு - பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நடிகை ஜெயப்பிரதா கோர்ட்டில் ஆஜரான பின் ஜாமீனில் விடுதலை
விளையாட்டு:
- இலங்கைக்கு எதிரான 2வது டி20 தொடர் இன்று நடைபெறுகிறது - தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய வீரர்கள் தீவிரம்
- கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் மேல் சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் மும்பை மருத்துவமனைக்கு மாற்றம்
- ஐபிஎல் தொடரை விட உலகக்கோப்பையை வெல்வதே முக்கியம் - இந்திய அணி வீரர்களுக்கு கவுதம் கம்பீர் அறிவுரை