புயலின் பாதிப்புகளை தவிர்க்க 12 முன் எச்சரிக்கை வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தல்களை பின்பற்றி, பாதுகாப்பாக இருங்கள் எனவும் தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
வானிலை தகவலறிந்து விழிப்புடன் இருங்கள். எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருங்கள்! நேரலை வானிலை அறிவிப்புகள், பேரிடர் எச்சரிக்கைகள், வெள்ள முன்னறிவிப்புகள் மற்றும் சமூக ஊடகங்களில் 24×7 தகவலைப் பெறுங்கள் என்றும் மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
12 முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள்
- அவசர தகவலுக்காக செல்போன்களை சார்ஜ் செய்யவும்.
- வானொலி கருவியுடன் கூடுதல் பேட்டரிகளை வைத்துக் கொள்ளவும்.
- வானிலை அறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும்.
- ஆவணங்கள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களைப் பாதுகாப்பாக வைக்கவும்.
- பாதுகாப்பான இடங்களில் தங்கவும்.
- அவசர கால பொருட்கள் மற்றும் முதலுதவிப் பெட்டிகளை தயாராக வைத்திருக்கவும்.
- வீட்டின் கூரையைப் பாதுகாக்கவும்.
- கால்நடைகள்/ செல்லப் பிராணிகளை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும்.
- புயல் அல்லது வெள்ள எச்சரிக்கை தெரிவிக்கப்பட்ட உடனே உயரமான இடத்திற்கோ அல்லது அரசு முகாமிற்கோ செல்லவும்.
- குறைந்தபட்சம் ஒரு வார உணவு மற்றும் தண்ணீரைச் சேமிக்கவும்.
- நீங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் பயிற்சி முகாம்களை நடத்துங்கள்.
- அரசு அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும். அறிவிப்புகள் பரிந்துரைக்கப்பட்டால், நியமிக்கப்பட்ட பாதுகாப்பு முகாம்களுக்குச் செல்லவும்.
இவ்வாறு தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. அதேபோல உதவி எண்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
மாநில உதவி எண்: 1070
மாவட்ட உதவி எண்: 1077
வாட்ஸ் அப் எண்: 9445869848