காலநிலை வல்லுநர்கள் என்னதான் பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டு நம்மை இயற்கை இடர்ப்பாடுகளில் இருந்து காத்துக்கொள்ள பல்வேறு அறிவுரைகளைக் கூறினாலும் அவற்றையெல்லம் மிகவும் கவனமாக உரையாடுவதும் காலநிலை மாற்றம் குறித்த எச்சரிக்கை கட்டுரைகள் வெளிவந்த பத்திரிகைச் செய்திகளை பத்திரமாக எடுத்து வைப்பதும், செய்திகளை உடனே குடும்ப வாட்ஸ் -அப் குரூப்களுக்கு பகிர்வதுடனும் காலநிலை மாற்றம் மீதான நமது அக்கறை முடிந்து விட்டது. 


உலகில் வேறு எங்கோ 100 டிகிரி பாரான்ஹீட் வெயிலைக் கடந்த செய்திகளை உச்சுக்கொட்டிக்கொண்டே படிக்கும்போது, இங்கெல்லாம் எப்படி தான் மனிதர்கள் இருக்கிறார்களோ என நினைத்துக் கொண்டே வாசித்த காலம் எல்லாம் மலையேறிப்போய், தற்போது 100 டிகிரி பாரன்ஹீட்டைக் கடந்து கொளுத்தும் வெயிலில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் சென்னை மட்டும்தான் அதிகப்படியான வெயில் பதிவாகும் மாவட்டமாக இருந்தது. அப்போதெல்லாம், சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் இருப்பவர்கள் நம்ம ஊரு கொஞ்சம் பரவாயில்லை என்ற சொல் இன்று காணாமல் போய்விட்டது எனும் அளவிற்கு தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் அளவு உள்ளது. இந்நிலையில் இன்று அதாவது மே மாதம் 18ஆம் தேதி  தமிழ்நாட்டில் அதிக வெப்பநிலை பதிவான இடங்கள் குறித்து காணலாம். 


வேலூர் - 41.8 டிகிரி செல்சியஸ், பரமத்தி வேலூர் -  41.5 டிகிரி செல்சியஸ், திருத்தணி -  39.6 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூர் - 39.2 டிகிரி செல்சியஸ், திருச்சி - 39.1 டிகிரி செல்சியஸ், மதுரை - 39 டிகிரி செல்சியஸ், ஈரோடு - 38.8 டிகிரி செல்சியஸ், சேலம் - 38.6 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டை - 38.5 டிகிரி செல்சியஸ், சென்னை மீனம்பாக்கம் - 38.4 டிகிரி செல்சியஸ், நாமக்கல் மற்றும் நாகப்பட்டினம் - 38 டிகிரி செல்சியஸ், தர்மபுரி மற்றும் பரங்கிப்பேட்டை  - 37.6 டிகிரி செல்சியஸ், காரைக்கால் - 37.2 டிகிரி செல்சியஸ், 36.5 - கோவை டிகிரி செல்சியஸ், சென்னை நுங்கம் பாக்கம் - 36.1 டிகிரி செல்சியஸ், கடலூர் - 35.8 டிகிரி செல்சியஸ், தொண்டி - 35.5 டிகிரி செல்சியஸ், அதிராமபட்டினம் - 34.5 டிகிரி செல்சியஸ், பாம்பன் - 34.4 டிகிரி செல்சியஸ், தூத்துக்குடி - 34.1 டிகிரி செல்சியஸ், வால்பாறை - 29 டிகிரி செல்சியஸ், குன்னூர் - 26 டிகிரி செல்சியஸ். கொடைக்கானல் - 21.6 டிகிரி செல்சியஸ், உதகமண்டலம் - 21.1 டிகிரி செல்சியஸ். 


ஏற்கனவே தமிழ்நாட்டில் இயல்பான கோடை வெப்பத்தில் இருந்து 2 முதல் 3 டிகிரி அதிகப்படியாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருந்தது. 


மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


18.05.2023 மற்றும் 19.05.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


20.05.2023 முதல் 22.05.2023 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.