Vintage Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையை புரட்டிப்போட்ட அந்த 7 கார்கள் - லிஸ்ட் உள்ளே..!

Vintage Cars: இந்திய கார் சந்தையின் தவிர்க்கமுடியாத அடையாளமாக கருதப்படும், 7 கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Continues below advertisement

Vintage Cars:  இந்திய கார் சந்தையின் மாற்றியமைத்த 7 கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Continues below advertisement

மாருதி சுசுகி ஸ்விஃப்ட்:

மாருதி சுசுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் கார் மாடல் அறிமுகப்படுத்தப்பட்ட பல தசாப்தங்களுக்குப் பிறகும், இன்றும் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றாக உள்ளது. அதன் நம்பகத்தன்மை, செயல்திறன் மற்றும் மலிவு விலையால் இந்த கார்கள் இந்திய சாலைகளை ஆக்கிரமித்தது. ஸ்விஃப்ட் சிறிய டீசல் இன்ஜின்களை பிரபலமாக்கிய கார் மற்றும் 1.3L ஃபியட் மல்டிஜெட்டை மிகவும் பிரபலமாக்கியது.

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் அம்பாசிடர்:

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அம்பாசிடர், மோரிஸ் ஆக்ஸ்போர்டு III ஐ அடிப்படையாகக் கொண்டது. ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் பேட்ஜின் கீழ் இந்தியாவில் விற்பன செய்யப்பட்டது. இது இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிகுந்த நபர்கள் பயன்படுத்தும் வாகனமாகவும்,  அதன் வசதி மற்றும் இடத்திற்காகவும் பிரபலமாக அறியப்பட்டது. அம்பாசிடர் கார் மாடல் 1957 முதல் 2014 வரை தயாரிப்பில் இருந்தது.

மாருதி சுசுகி ஜிப்சி:

மாருதி சுசுகி ஜிப்சி அந்த மாடல்களுக்கான சின்னமாக உள்ளது. இது ஒரு வலுவான 4wd வாகனம், இது நம் நாட்டில் காவல்துறை, ராணுவம் மற்றும் பிற அரசு ஊழியர்களால் பயன்படுத்தப்பட்டது. ஆஃப் ரோடில் பயணம் செய்ய விரும்புவோருக்கு ஜிப்சி ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். அதன் குறைந்த எடை மற்றும் நம்பகத்தன்மை கொண்ட தன்மையால் ஜிப்சி மாடல் பெரும் பிரபலமடைந்தது.

டாடா இண்டிகா:

டாடா இண்டிகா கார் என்பது உள்ளே அதிகப்படியான இடவசதியுடன், மாருதிக்கு நிகரான விலையில் இந்திய காரை உருவாக்க வேண்டும் என்ற, ரத்தன் டாடாவின் தொலைநோக்கு பார்வையில் உருவானது. இது உடனடி வெற்றியைப் பெற்றது.  பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வேரியண்ட்களையும் வழங்கியது. அறிமுகமான நேரத்தில் இந்த கார் மிகவும் அரிதாக இருந்தது.

டாடா சஃபாரி:

டாடா சஃபாரி என்பது டாடாவின் வலுவான மற்றும் முரட்டுத்தனமான 4wd SUV ஆகும். குறுகிய காலத்திலேயே து அந்நிறுவனத்தின் அடையாளமாக மாறியது. இந்த கார் 2000 ஆம் ஆண்டின் முற்பகுதியில் எஸ்யூவியின் பொதுவான குணாதிசயங்களைக் கொண்டிருந்தது. சாலையில் உள்ள மற்ற கார் மாடல்கள் மிது ஆதிக்கம் செலுத்த விரும்பும் மக்கள் சஃபாரியைத் தேர்ந்தெடுத்தனர்.

ஹூண்டாய் சான்ட்ரோ:

ஹூண்டாய் சான்ட்ரோ அறிமுகமாக உடனே இந்திய சந்தையில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் மூலம் ஹூண்டாய் இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பாளராகவும் உருவெடுத்தது. இது மாருதிஸைப் போலவே பல அம்சங்களையும் தொழில்நுட்பத்தையும் வழங்குகிறது. கார் ஓட்டுவது எப்படி என்று கற்றுக் கொண்டிருந்தவர்களுக்கு ஹூண்டாய் சான்ட்ரோ ஒரு சிறந்த முதல் கார் ஆகும். அதன் விளைவாக பல தசாப்தங்களுக்கு சான்ட்ரோ நல்ல விற்பனயை பெற்றது. 

மருதி சுசுகி 800:

மாருதி சுசுகி எப்படி ஒரு தனி அடையாளமோ, அதேபோன்றது தான் அந்நிறுவனத்தின் மாருதி சுசுகி 800 மாடலும் . தொழிலாளி வர்கத்தினரும் வாங்கக்கூடிய முதல் கார் இதுவாகும். 800 இன் முதல் பதிப்புகள் ஜப்பானில் பெரும்பகுதிகளை ஆக்கிரமித்து இருந்தன. இந்த மாடல் எளிய மக்களையும் ஒரு காரை வைத்திருக்க அனுமதித்ததோடு,  மாருதி சுசுகி நிறுவனம் இன்றும் இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்த முக்கிய பங்காற்றியது.

Continues below advertisement
Sponsored Links by Taboola