2021-ல்  1.7 பில்லியன் டாலராக இருந்த தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி 7.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,


”2021-இல் 1.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி, நமது திராவிட மாடல் அரசில் இப்போது 7.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்திருக்கிறது. கூடுதல் தகவல், இது மத்திய அரசின் புள்ளிவிவரம்! எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செல்போன் ஏற்றுமதியில் முன்னணியில் நின்று, நாட்டின் ஏற்றுமதியில் 30% பங்கு வகிக்கும் நாம், நம் இலக்குகளை நோக்கி விரைந்து நடைபோடுவோம்! தலைநிமிரும் தமிழ்நாடு”. இவ்வாறு அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். 


 






மேலும் படிக்க 


Kanimozhi: பாஜக ஆட்சியில் நாட்டின் தலைவருக்கே சாதி, பாலினப் பாகுபாடு - கனிமொழி கண்டனம்


Lok Sabha Election 2024: காலணியை மாலையாக போட்டுக்கொண்டு வாக்கு சேகரித்த சுயேட்சை வேட்பாளர் - காரணம் என்ன?