தமிழகத்தில் தொழில்துறை முன்னேற்றம்

தொழில் துறையில் பல மாநிலங்கள் போட்டி போட்டு அசத்தி வரும் நிலையில், அதில் தமிழகம் தனெக்கென ஒரு பாதையை உருவாக்கி உயர்ந்து வருகிறது. தமிழ்நாடு ஒவ்வொரு துறையிலும் அபரிமிதமான வளர்ச்சி கண்டு, இந்தியாவில் முன்னணி மாநிலமாக சிறந்து விளங்குகிறது. இதனை மத்திய அரசினுடைய ஆய்வறிக்கைகள் அவ்வப்பொழுது வெளியிட்டு வருகின்றன. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  தொழில்துறை எரிசக்தித் திறனில் தமிழ்நாடு இந்தியாவின் நம்பர் 1 மாநிலம் எனத் திகழ்வதாக மாநில எரிசக்தி திறன் குறியீடு (State Energy Efficiency Index -SEEI) அமைப்பு தெரிவித்துள்ளது.

Continues below advertisement

தொழில்துறை எரிசக்தி திறனில் உச்சம் தொட்ட தமிழ்நாடு

தொழில்துறை எரிசக்தி திறனில் தமிழ்நாடு தேசிய அளவில் உச்சம் பெற்று மாநில ஆற்றல் திறன் குறியீடு (SEEI) 2024 இன் குழு 1 இல் 55.3 சதவீத மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.  ஆந்திரப் பிரதேசம் அளவீட்டுக் குறியீடுகளின்படி, நாட்டின் மிக உயர்ந்த முன்னேற்றத்தைப் பதிவு செய்து, 27.5சதவீத முன்னேற்றத்தைப் பதிவு செய்து, இரண்டாம் குழுவில் முன்னிலை வகிக்கிறது. 23.1சதவீதம் வளர்ச்சி பெற்று ஒடிசா,

28.8சதவீதம் வளர்ச்சி பெற்று சத்தீஸ்கர், 16.5சதவீதம் வளர்ச்சி பெற்று மத்தியப் பிரதேசம், 10.9 சதவீதம் வளர்ச்சி பெற்று திரிபுரா உள்ளிட்ட பல மாநிலங்களும் வலுவான முன்னேற்றத்தைப் படைத்துள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தனித்தன்மையுடன் கூடிய முயற்சிகளின் பயனாக குழு 1 இல் உள்ள தமிழ்நாடு, கட்டுமானத் துறையில் ஆற்றல் திறன் முயற்சிகளை ஊக்குவிப்பதிலும், செயல்படுத்துவதிலும் முன்னணி மாநிலமாக உருவெடுத்துள்ளது. மேலும், அதிக எண்ணிக்கையிலான சான்றளிக்கப்பட்ட பசுமை கட்டடங்களைக் கொண்ட முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

Continues below advertisement

தமிழ்நாட்டின் PEACE திட்டம் வாயிலாக 2023-24 ஆம் ஆண்டில் விழிப்புணர்வு, பயிற்சி, எரிசக்தி தணிக்கை மானியங்கள் ஆகியவற்றுடன் செயல்படுத்தல் முயற்சிகளுக்காக குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான ஆற்றல் திறன்களுக்காக மொத்தம் 2.6 கோடி ரூபாய் முதலீடு செய்து ஊக்கப்படுத்தியுள்ளது. எரிசக்தி பாதுகாப்பு முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக, 25 மாநிலங்கள் எரிசக்தி பாதுகாப்பு விருதுகளைப் பெற்றுள்ளன. விருதுகளின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு. ஒடிசா ஆகியவை முன்னணியில் உள்ளன. அடுத்த நிலையில் குஜராத் இடம்பெற்றுள்ளது.

தொழில்துறை எரிசக்தி செயல்திறனில் மிகப்பெரி ஏற்படுத்தியுள்ள மாநிலங்கள் 

1 தமிழ்நாடு- 55.3 சதவீதம்

2 சத்தீஸ்கர்- 29 சதவீதம்

3 ஆந்திரப் பிரதேசம்- 26 சதவீதம்

4 ஒடிசா- 23 சதவீதம்

5 மத்தியப் பிரதேசம்- 17 சதவீதம்

6 திரிபுரா- 11 சதவீதம்