சென்னையில் தொடரும் மழை

Continues below advertisement


டிட்வா புயலின் தாக்கம் காரணமாக சென்னையில் காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு 50 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. 10 கி.மீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்கிறது. அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக் கூடும் -சென்னை வானிலை ஆய்வு மையம்


குட்டி யானையை கொண்டு வர தடை இல்லை - உயர்நீதிமன்றம்


நெல்லையப்பர் கோயிலுக்கு உத்தரகாண்டில் இருந்து யானையை கொண்டு வர தடைக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. கடந்த ஜனவரியில் நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உடல் நலக் குறைவால் உயிரிழந்ததை அடுத்து, உத்தரகாண்டில் இருந்து குட்டி யானையை கொண்டு வர, அறநிலையத்துறை மற்றும் வனத்துறை நடவடிக்கை.



இன்று மெயின்ஸ் தேர்வு


TNPSC குரூப் 1 முதன்மைத் தேர்வு இன்று சென்னையில் நடைபெறுகிறது. இன்று தொடங்கி தொடர்ந்து 4 நாட்கள் இத்தேர்வானது நடைபெறும். சென்னையில் 18 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட உள்ளது. எல்லா மையங்களிலும் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று முதல் தொடக்கம். வரும் 19ம் தேதி வரை நடக்கும் இந்த கூட்டத் தொடரில் 14 முக்கிய மசோதாக்களை அறிமுகப்படுத்த  பாஜக அரசு திட்டம்.
டெல்லி கார் குண்டு வெடிப்பு, SIR பணிகள், டெல்லி காற்று மசோதா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்.


“விரக்தியை வெளிப்படுத்தக் கூடாது”


பீகார் தேர்தல் தோல்வியின் மனச் சோர்வில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளியே வர வேண்டும்; தேர்தல் வெற்றியின் ஆணவம், தோல்வியின் விரக்தியை அவையில் வெளிப்படுத்தக் கூடாது
நாட்டை கட்டமைக்கும் வகையில் கூட்டத்தொடரை பயன்படுத்த வேண்டும் - பிரதமர் மோடி பேட்டி


திமுக நோட்டீஸ்


நெல் கொள்முதலுக்கான ஈரப்பத உயர்வு, 100 நாள் வேலை திட்ட நிதி விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்க, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு நோட்டீஸ். தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் நடைபெறும் SIR குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் நோட்டீஸ்.


இந்தியர்கள் மீட்பு


டிட்வா புயல் பாதிப்பால் இலங்கையின் கொழும்பு விமான நிலையத்தில் சிக்கி தவித்த 400க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர். ஆப்பரேஷன் சாகர் பந்து நடவடிக்கையின் கீழ், இங்கிலாந்து, ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களையும் மீட்ட இந்திய விமானப்படை.


முதுகில் குத்த மாட்டேன்..!


பிறர் முதுகில் ஒருபோதும் குத்த மாட்டேன்... எதையும் நேருக்கு நேர் எதிர்கொள்வேன்;
முதலமைச்சர் சித்தராமையாவுக்கும், எனக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை கர்நாடக முதல்வர் பதவி தொடர்பான மோதல் விவகாரம் முடிந்துவிட்டதாக கூறிய நிலையில், துணை முதல்வர் சிவக்குமார் பேட்டி


கோலி படைத்த சாதனை


சர்வதேச போட்டிகளில் 70வது முறையாக ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார் இந்திய வீரர் விராட் கோலி. முதலிடத்தில் சச்சின் நீடிப்பு (76) தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ODI-யில் சதம் (135) விளாசி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் கோலி.


பட்டத்தை வென்ற UAE Bulls அணி


அபுதாபி டி 10 லீக் தொடரில் Aspin Stallions அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது பொல்லார்ட் தலைமையிலான UAE Bulls அணி. 30 பந்துகளில் 98 ரன்களை குவித்த டிம் டேவிட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.