14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:
தேனி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம், திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை நிலவரம்:
தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதன் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
சென்னையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:
இந்நிலையில் தற்போது தேனி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம், திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் முன்னெச்சரிக்கையுடன் தங்களது வேலைகளை திட்டமிட்டு கொள்ளுங்கள்.