புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள கணுவாப்பேட்டையை சேர்ந்தவர் ரங்க சாமி ஆசிரியர் அவரது மகன் செந்தில் குமார். பாஜக பிரமுகரான இவர் மங்கலம் தொகுதி பொறுப்பாளராக பணியாற்றி வந்தார். மேலும் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர். இந்நிலையில் நேற்று இரவு மங்கலம் தொகுதிக்கு உட்பட்ட அரியூரில் நடந்த பாஜக கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார் . பின் வில்லியனூர் கண்ணகி அரசு மேல் நிலைப்பள்ளி அருகில் உள்ள பேக்கரியில் டீ குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிளில் வந்தவர் முகமுடி அணிந்து கொண்டு அவரை கவனித்தனர். எதிர்பாராத விதமாக செந்தில் குமார் மீது அவர்கள் நாட்டு வெடிகுண்டை வீசினர். இதில் சுதாரித்த செந்தில் குமார் அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார்.


ஆனால் அதற்குள் மற்றொரு கும்பல் அவர் மீது நாட்டு வெடிகுண்டை வீசியது. அந்த வெடிகுண்டு அவர் மேல் பட்டு பெரும் சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் நிலைகுலைந்து விழுந்த அவரை சுற்றி வளைத்த கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் பாதிக்கப்பட்ட செந்தில் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் செந்தில் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்நிலையில் கொலையாளிகளை கண்டறிய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. செந்தில் குமார் படுகொலை அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற அமைச்சர் நமச்சிவாயம் கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுமாறு காவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


 









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண