தமிழ்நாடு சட்டப்பேரவையில் மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில்,  அமலுக்கு வந்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 


மதுவிலக்கு சட்டத்திருத்தம்:


சில தினங்களுக்கு முன்பு , தமிழ்நாடு சட்டப்பேரவையில் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


புதிய சட்டத்தின்படி, கள்ளச்சாராய குற்றங்களான பதுக்கல் மற்றும் விற்பனையில் பயன்படுத்தப்படும் அனத்து அசையும் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சாராயத்தை தயாரித்து விற்பவர்களுக்கு, ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையுடன், 10 லட்சம் ரூபாய் வரையில் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 


அமலாக்கம்:


சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு, சில தினங்களுக்கு முன்பு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இந்நிலையில், சட்டம் அமலாக்கத்திற்கு வந்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  


இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவிக்கையில், கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் மற்றும் விற்பனை செய்வோர் மீதுகடுமையான நடவடிக்கைகள் எடுத்திடும் வகையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, புதிய தமிழ்நாடு மதுவிலக்குத் திருத்தச் சட்ட மசோதா 2024 அமலாக்கம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.