கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியத்தின் சார்பில் அமராவதி ஆறு மாசுபடுவதை குறைக்கும் பொருட்டு அமைக்கப்பட்ட குழுக்கள் மூலம் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தொழிற்சாலை கழிவுகளை ஆற்றில் கலந்து விடாதபடியும்,  அதுபோல் மாநகராட்சி நிர்வாகம் நகர்ப்புற உள்ள கழிவுகளை உரிய முறையில் சுத்திக்கரிப்பு செய்து ஆற்றில் கலக்காத வண்ணம் பிற பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் வகையில் பணி மேற்கொள்ளவேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.




இந்நிகழ்வில் மாவட்ட மாசுக்கட்டுபாட்டு வாரியம் அலுவலர் ஜெயலெட்சுமி, கரூர் மாநகராட்சி பொறியாளர் நக்கீரன், தனித்துணை ஆட்சியர்(சபாதி) சைபுதீன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையட்டு வீரர்/வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சிறப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம் கீழ்கண்ட மூன்று வகைகளில்  செயல்படுத்தப்பட்டு வருகிறது.   இதுகுறித்த   செய்தியினை கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர்  டாக்டர் த.பிரபுசங்கர்,இ.ஆ.ப.,  தெரிவிக்கையில் 


 



  • தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை (ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள விளையாட்டுக்கள் மட்டும்) (Special Scholarship for Elite Sportspersons Scheme - ELITE) – அதிகபட்சம் 25 நபர்கள் வரை ஓர் ஆண்டுக்கு மட்டும் அதிகபட்ச உதவித் தொகை ரூ.30 இலட்சம் வரை வழங்கப்படும்.


 




(i)    கடந்த 2 ஆண்டுகளில் ஒரு முறையாவது உலக தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் இடம் பெற்றிருக்க வேண்டும்.  (அல்லது) கடந்த 2 ஆண்டு காலங்களில் ஒலிம்பிக் அல்லது உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் (நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுபவைகளில் பங்கு  பெற்றிருக்க வேண்டும்.


(ii) ஆசிய விளையாட்டுப் போட்டி/ காமன்வெல்த் போட்டிகள் அல்லது ஆசிய சாம்பியன்ஷிப்/கமான்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கடந்த இரண்டு ஆண்டு காலங்களில் முதல் 8 இடங்களில்  இடம்   பெற்றிருக்க   வேண்டும். 


(iii)   ஒலிம்பிக்கில் தனிநபர் / இரட்டையர் பிரிவு போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். 


(iv) கடந்த 4 ஆண்டுகளில் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்றிருக்க வேண்டும்.