நேபாள நாட்டில் மரணமடைந்த தமிழக வாலிபால் வீரர் ஆகாஷின் உடல் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. 


நேபாளம் நாட்டிற்கு வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க சென்ற திருவள்ளூரைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஆகாஷ். இவர் போட்டியின் போதே திடீரென்று உயிரிழந்தார். இந்நிலையில், அவருடைய உடலை கொண்டுவருவதில் சிக்கல் இருப்பதாக ஆகாஷின் பெற்றோர்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். காத்மாண்டுவில்  ஆகாஷ் மர்மமான முறையில் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், வாலிபால் வீரர் உடல் சென்னை வந்தடைந்துள்ளது.


ஆகாஷ் மரணம்: 


திருவள்ளூர் அருகே உள்ள கைவண்டூர் கிராமத்தைச் சேர்ந்த நேருதாசன் - லாத தம்பதியின் மகன் ஆகாஷ். இவர் சிறு வயது முதலே விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர். வாலிபால் மீதிருந்த ஆர்வத்தால் அம்பத்தூரில் உடற்கல்வி ஆசிரியராகவும் பணியாற்றி இருந்திருக்கிறார். தமிழ்நாடு மற்றும் இந்திய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி பல பரிசுகளையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். 


ஈரோட்டில் உள்ள யூத் ஸ்போர்ட்ஸ் புரோமோசன் அசோசியேசன் என்ற அமைப்பு மூலம் கடந்த 21- ஆம் தேதி நேபாளம் நாட்டில் உள்ள போக்ரா நகரத்தில் ரங்கசாலா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொள்ள சென்றிருந்தார்.