பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று கோவைக்கு வருகை தந்தார். மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெற்ற கோவை, நீலகிரி தொகுதி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு ஜெ.பி.நட்டா உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்த அவர், ஈஷா யோகா மையத்தில் நேற்றிரவு தங்கியிருந்தார். இன்று ஜெ.பி. நட்டா கோவை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் ஒடிசா மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றார். அவரை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகள் வழி அனுப்பி வைத்தனர். 


அதனைத் தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது, “பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா கட்சி பயணமாக கோவைக்கு வருகை தந்தார். கட்சி பொறுப்பில் உள்ள நிர்வாகிகளை சந்தித்து பேசினார். ஜெ.பி.நட்டா மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றி தொண்டர்களுக்கு எழுச்சியையும் உத்வேகத்தையும் அளித்தார். நீலகிரி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர்கள் வெற்றி வேட்பாளர்களாக வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் அந்த விழா அமைந்துள்ளது.


அதனைத் தொடர்ந்து அன்னூரில் கிளைத்தலைவர் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தார். தேசியத்தலைவர் வருவது உத்வேகம் அளிக்கக்கூடியது. அவர் தமிழகத்திற்கு வருவது புதிது அல்ல. தமிழகத்தின் மீது சிறப்பு கவனம் பிரதமர் மோடி மற்றும் தேசியத் தலைவருக்கு உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கான சுற்றுப்பயணத்தைக் கூட இங்கிருந்து தான் துவக்கி உள்ளார். தேசிய தலைவர் எப்போது வந்தாலும் தொண்டர்களுக்கு உத்வேகமாக உள்ளது” எனத் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண