Breaking LIVE | நிஜ செங்கேணி “பார்வதி அம்மாளுக்கு” சூர்யா செய்த மரியாதை...

இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள்..

ABP NADU Last Updated: 14 Nov 2021 06:23 PM
Breaking News Live: அமலாக்கத்துறை, சிபிஐ இயக்குநர்கள் பதவிக்காலம் நீட்டிப்பு

அமலாக்கத்துறை, சிபிஐ இயக்குநர்களின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக நீட்டிக்கும் அவசரச் சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். 

Tamil Nadu News LIVE: தலைமை நீதிபதிக்காக கைகோத்த மூத்த வழக்கறிஞர்கள்

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜியை இடமாற்றம் செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்ற கொலீஜியத்திற்கு மூத்த வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

Kanyakumari Red Alert: கன்னியாகுமரிக்கு ரெட் அலெர்ட் - அதிகனமழைக்கு வாய்ப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பு - ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது

இனி சனிக்கிழமைகளில் பள்ளி உண்டு - புதிய உத்தரவு

ஏற்கெனவே விடப்பட்ட விடுமுறைகளை ஈடு செய்ய அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை திறக்க வேண்டும் - பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி

“எனது சொந்த பெண்ணுக்கு இந்த நிலைமை ஏற்பட்டால் எப்படி இருப்பேனோ அதே நிலை தான் நான் இருக்கிறேன் - கோவை மாணவி தற்கொலை விவகாரம் குறித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்

ஆறுதல் கூறிய அமைச்சர்கள்

தற்கொலை செய்து கொண்ட 12ஆம் வகுப்பு மாணவி வீட்டிற்க்கு வந்த அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் செந்தில் பாலாஜி பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

Breaking News LIVE: மாணவி தற்கொலை - பள்ளி முதல்வரிடம் தீவிர விசாரணை

கோவை பள்ளி மாணவி தற்கொலை - பள்ளி முதல்வரிடம் தீவிர விசாரணை

Background

கோவையில் ஆசிரியரால் பாலியல் தொல்லைக்கு உள்ளான 17 வயது பள்ளி மாணவி தற்கொலை சம்பவம் கடந்த இரு தினங்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும் பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்


மாணவி தற்கொலைக்கு பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் அளித்த பாலியல் தொல்லையே காரணம் என உறவினர்கள் புகார் அளித்ததன் அடிப்படையில்,  கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.