தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற முக்கிய அரசியல்,சமூக நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம். 


*கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி இந்த ஆண்டிற்கான 12-ஆம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அறிவித்தார். மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் சான்றிதழ் வழங்குவது குறித்து முடிவுசெய்ய, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் உயர்கல்வித்துறை செயலாளர், சென்னை பல்கலைகழக துணைவேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்படும்.


Tamil Nadu Class 12 Exams Cancelled : 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


*தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், உயர்கல்வி பிரிவுகளுக்கு நடத்தப்படும் நீட் போன்ற தேர்வுகளை ரத்துசெய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


*தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. ஏ.கே. இராஜன் தலைமையில் உயர்நிலைக் குழுவை தமிழக அரசு அமைத்தது. 


முடிவுக்கு வருமா நீட்? ஏ.கே ராஜன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைப்பு


*தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.  ஜூன் 14 வரையிலான இந்த ஊரடங்கு காலத்தில் இறைச்சிக்கடைகள், பழக்கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. 


*கோயம்பத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் வரும் 14-ஆம் தேதி வரை அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.   



 


*மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்துமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.


உலக சுற்றுச்சூழல் தினம்: தமிழ்நாடு சந்திக்கும் முக்கிய பிரச்சனைகள் என்ன?


*தமிழகத்தில் 19 காவல் துறை அதிகாரிகள் பணிஇட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் ஐ.பி.எஸ். செங்கல்பட்டு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை, சைபர்கிரைம் பிரிவு எஸ்.பி. சுதாகர், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை, சைபர்பிரிவு சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. சிபி சக்ரவர்த்தி ஐ.பி.எஸ்., திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் எஸ்.பி. ஓம்பிரகாஷ் மீனா ஐ.பி.எஸ்.., ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்


IPS Officers Transferred | 27 காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு


* தென்மேற்கு பருவமழையில் முன்னேற்றம் காணப்படுவதால், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உட்பட நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலைத்துறையின் முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது