நேற்று ஜூன் 5-ஆம் தேதி அவர் கணக்கின் வெரிபைடு பேட்ஜ்ஜை ட்விட்டர் நீக்கியது குறிப்பிடத்தக்கது. பிரபல சமூகவலை தள பக்கங்களில் ஒன்று டுவிட்டர். இதனை, பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இதன்மூலம், தங்களின் கருத்துகளையும், தகவல்களையும் பதிவிட்டு வருகின்றனர். இதனால், அனைவருக்கும் இந்த சமூகவலைதள பக்கம் பெரிதும் உதவிகரமாக உள்ளது. டுவிட்டர் பக்கத்தில் சர்சையான கருத்துகளையும் வெளியிட்டால் அதனை நீக்கி, டுவிட்டரை உபயோகப்படுத்துபவரின் கணக்கையும் நீக்கி டுவிட்டர் நிறுவனம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்நிலையில், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கின் வெரிபைடு பேட்ஜ்ஜை டுவிட்டர் நிறுவனம் நேற்று நீக்கியது. அதாவது, வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கில் ப்ளூ டிக் நேற்று நீக்கப்பட்டது. உறுதிப்படுத்தப்பட்டதற்கு அடையாளமாக குறிக்கப்படும் ப்ளூ டிக்கை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது. அதே நேரத்தில் அவரின் அலுவலக கணக்கிற்கு தொடர்ந்து வெரிபைடு பேட்ஜ் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
வெங்கையாவின் வெரிபைடு டிக்கை நீக்கிய டுவிட்டர்!
தற்போது துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கின் அந்த ப்ளூ டிக்கை தற்போது மீண்டும் அளித்துள்ளது ட்விட்டர் நிறுவனம். சமீபத்தில், நைஜீரிய நாட்டின் அதிபர் முகமது புஹாரி, 1960-70 வரை நைஜீரியாவில் நடைபெற்ற உள்நாட்டு சண்டையை மேற்கோள் காட்டி வன்முறையை தூண்டும் வகையில் டுவிட்டர் பக்கத்தில் கருத்துகளை பகிர்ந்திருந்தார். அவரது அரசுக்கு எதிராக பொதுமக்கள் பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவரின் இந்த டுவிட்டர் பதிவு போராட்டத்தில் ஈடுபடுவர்கள் மீது தாக்குதலை நடத்தத் தூண்டுவது போல உள்ளது எனக்கூறி அவரின் கருத்தை டுவிட்டர் பக்கத்தில் இருந்து டுவிட்டர் நிறுவனம் நீக்கியது குறிப்பிடத்தக்கது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நைஜீரியாவில் டுவிட்டருக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த சமூக வலைதள நிறுவனமான 'கூ' நைஜீரியாவில் கால்பதிக்க முடிவு செய்துள்ளது. அந்நாட்டு மக்கள் அங்குள்ள உள்ளுர் மொழிகளிலும் 'கூ' செயலியை பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த செயலியை உருவாக்கியவர்களில் ஒருவரான அப்ரமேயா ராதாகிருஷ்ணா வெளியிட்ட ட்விட்டர் பதிவில் நைஜீரியாவில் தற்போது கூ செயலி பயன்படுத்த முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். இரண்டு வருடத்தில் 10 கோடி பயனாளர்கள் என்ற இலக்கை நோக்கு பயணிப்பதாகவும் கூறியுள்ளார்.