திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் மருமகனிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெகத்ரட்சகன் மருமகன் நாராயணசாமி இளமாறம் அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகன் வீட்டுக்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது.
எலைட் டிஸ்டில்லரிஸ், பான்யம் சிமெண்ட் உட்பட 12 நிறுவனங்களில் நாராயணசாமி இளமாறன் இயக்குனராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் தொடர்பான இடங்களில் ஐந்தாவது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.
பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ,forensic audit எனப்படும் தொழில்நுட்ப தடவியல் ஆய்வு வருமானவரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மருத்துவமனை கல்லூரி அலுவலகங்கள் ஆகியவற்றில் மென்பொருள்கள் பயன்படுத்தி கணக்கு வழக்குகளை மறைத்து வைத்திருக்கின்றார்களா என்ற அடிப்படையில் சோதனை நடைபெறுகிறது.
வெளிநாட்டு முதலீடுகள் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கணக்குகள் உள்ளிட்டவற்றை கண்டுபிடிக்கும் பணியில் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணை வளையத்திற்குள் இருக்கும் ஜெகத்ரட்சகன், தொடர்ந்து
சட்டவிரோத பண பரிமாற்றமும் செய்துள்ளாரா என விசாரணை நடைபெறுகிறது. இருப்பினும், இதுகுறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.