Tamilnadu News LIVE: தமிழ்நாட்டில் 1669 பேருக்கு கொரோனா தொற்று: 17 பேர் உயிரிழப்பு!

Latest News in Tamil Today LIVE: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சமூகம் மற்றும் அரசியல் நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.

ABP NADU Last Updated: 17 Sep 2021 07:51 PM
தமிழ்நாட்டில் 1653 பேருக்கு கொரோனா தொற்று: 22 பேர் உயிரிழப்பு!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1653 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே 22 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 1669 பேருக்கு கொரோனா தொற்று: 17 பேர் உயிரிழப்பு!

தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 1693இல் இருந்து 1,669 ஆக குறைந்துள்ளது. ஒருநாள் கொரோனா பாதிப்பு நான்கு நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் மீண்டும் குறைந்துள்ளது. சென்னையில் மேலும் 196 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 17 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,288 ஆக உயர்ந்துள்ளது.

செப்டம்பர் 19ஆம் தேதி சென்னையில் 1,600 தடுப்பூசி முகாம்கள்

தடுப்பூசி முகாம் நடைபெறும் செப்டம்பர் 19ஆம் தேதியன்று சென்னையில் 1,600 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. முகாம்கள் அமைந்துள்ள இடங்களை www.chennaicorporation.gov.in தளத்தில் காணலாம். 044-25384520, 46122300 என்ற எண்களில் தொடர்புகொண்டும் தடுப்பூசி முகாம் குறித்து அறியலாம்.

ஒரே நாளில் 2 கோடி பேருக்குக் கொரோனா தடுப்பூசி

iந்தியாவில் இன்று ஒரே நாளில் 2 கோடி பேருக்கும் மேல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மதியம்1:30 மணி நிலவரப்படி ஒரு கோடிக்கும் மேல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கையை எட்டியுள்ளது.

தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு

தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி நாளை காலை 10.30 மணிக்கு பதவியேற்கிறார்.

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பாஜக கொடியினை ஏற்றி வைத்தார்

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மத்திய தகவல் தொடர்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் இணை அமைச்சர் எல் முருகன் மாதவரம் ரவுன்டானா அருகில் பிஜேபி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கொடியினை ஏற்றிவைத்தார்.

ஒடுக்கப்பட்டோருக்காகவே சிந்தித்த, செயல்பட்ட பெரியாருக்கு 143

சாதிச் சழக்குகளுக்கும் மதவெறிக்கும் எதிராக ஒரு கருத்து நூறு ஆண்டுகளைத் தாண்டி ஊறு படாமல் நிற்கிறதெனில் அந்தக் கருத்தின் பெயர் பெரியார். ஒடுக்கப்பட்டோருக்காகவே சிந்தித்த, செயல்பட்ட பெரியாருக்கு 143. வணக்கத்தோடு நினைவு கூர்கிறேன் என மக்கள்நீதிமய்யக் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பெரியாரை நினைவுக் கூர்ந்தார்.    

India Covid-19 Case Updates: கடந்த 24 மணி நேரத்தில் 34,403 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்

கடந்த 24 மணி நேரத்தில் 37,950 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 3,25,98,424 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைபவர்களின் எண்ணிக்கை 97.65 விழுக்காடாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 34,403 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 


இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,39,056 ஆகும்.


 

உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம்

உலக நோயாளிகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு "தாய் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் பாதுகாப்பு" என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டு உரையாற்றினார்.

ஆப்ரணதங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது

ஆப்ரணதங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 400 ரூபாய் குறைந்துள்ளது.

மோடி பிறந்தநாள்: பிகார் மாநிலம் முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு தடுப்பூசி

பிரதமர் திரு நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பிஹார் மாநில முதலமைச்சர்  நிதிஷ் குமார் மாநிலம் முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில், மாபெரும் கோவிட் தடுப்பூசி இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

GST Council Meeting: ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது..

ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது. கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருத்துகளின் மீதான வரிச்சலுகையை நீட்டிப்பது குறித்து இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம்.

Social justice Day: சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்றார் முதல்வர் மு.க ஸ்டாலின்

தந்தை பெரியாரின் 143-வது பிறந்த நாளான இன்று சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னையில் சமூக நீதி உறுதி மொழியை முதல்வர் மு.க ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார்.    


முன்னதாக, இந்த அறிவிப்பு குறித்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ அடித்தளம் அமைத்தவர் பெரியார். அவர் எழுதிய எழுத்துகள், பேசிய பேச்சுகள் எல்லாம் யாருமே எழுத, பேச தயங்கியவை ஆகும். பெரியாரின் போராட்டங்கள் குறித்து பேசுவது என்றால் அவையை 10 நாட்கள் ஒத்திவைத்துவிட்டு தான் பேச வேண்டும். பெரியாரின் குருகுல பயிற்சிதான் திமுகவை உருவாக்கியது” என்றார்.  


 

Background

Tamil Nadu News LIVE Today: 



மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர்  நிர்மலா சீதாராமன் தலைமையில் 45-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இன்று நடைபெறுகிறது. இன்றைய ஜிஎஸ்டி கூட்டத்தில், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி முறையின் கீழ் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 


இந்தியாவில் மது வகைகள், பெட்ரோல் தவிர அனைத்துப் பொருட்களும் சேவைகளும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்பட்டு விட்டன. பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர பல காலமாக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையைப் பொறுத்து உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் கூட எரிபொருள் விலையை அரசு குறைப்பதில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. அதற்கு, மத்திய அரசோ முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பெறப்பட்ட ஆயில் பாண்ட் எனப்படும் எண்ணெய் பத்திரங்கள் மூலமாக ஏற்பட்டுள்ள கடன் சுமை காரணமாகவே பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியவில்லை என்று கூறி வருகிறது.


    


 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.