காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இளங்கோவனுக்கு மூச்சுத்திணறல்


ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் மூச்சுத் திணறல் காரணமாக இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் இளங்கோவன். தற்போது அவருக்கு மீண்டும் மூச்சுத் திண்றல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


அவர் ஆக்டிவாக செயல்பட்டபோது தமிழக அரசியலில் அவர் பேசும் கருத்துகள் அவ்வப்போது புதிய அனலை கிளப்பி பேசுபொருளாகும். உடல்நலக்குறைவால் ஆக்டிவ் அரசியலில் இருந்து சற்று ஒதுங்கி இருந்த இளங்கோவன் அவரது மகன் திருமகன் ஈவேரா மறைவை அடுத்து, ஈரோடு கிழக்குத் தொகுதியில் நின்று எம்.எல்.ஏ.வாக மீண்டும் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.