தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மேலும், வடதமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது அதேபோல், மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.  இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். வரும் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில்   தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள்  மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


30.09.2023 மற்றும் 01.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லிமீட்டரில்):


சென்னை 28, கடலூர் சிதம்ப்ரம் 5.5, காட்டப்பாக்கம் 23.5, மேற்கு தாம்பரம்- செங்கல்பட்டு, ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் 31, சத்யபாமா பல்கலைக்கழகம் 42, திருவள்ளூர் 28 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.


தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக காலை நேரங்களில் நல்ல வெயிலும் மாலை நேரத்தில் நேர்மாறாக காற்றுடன் கனமழையும் பெய்து வருகிறது. இந்த வானியல் மாற்றம் செப்டம்பர் மாதத்தில் நிகழக்கூடிய வழ்க்கமான ஒன்று தான் என தனியார் வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பகல் நேரங்களில் அதிகபட்சமான வெயிலின் காரணமாக வெப்பச் சலனம் உருவாகி மேகக்கூட்டங்கள் சென்னையை நோக்கி நகர்ந்து மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் ரமணன் கூறியுள்ளார். சென்னையில் நேற்று பகல் நேரங்களில் நல்ல வெயில் இருந்த நிலையில் மாலையில் அதிகளவு புழுக்கம் இருந்தது. ஆனால் நேற்று இரவு முதல் நகரின் சில பகுதிகளில் ஆங்காங்கே இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பதிவானது. இன்று காலையும் நகரின் சில பகுதிகளில் லேசான முதல்  மிதமான மழை பெய்து வருகிறது.


School Leave: ராணிப்பேட்டை, வேலூர் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை - தொடர் மழை காரணமாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


Jayalalitha EPS: அன்று ஜெயலலிதா.. இன்று இபிஎஸ்..! கூட்டணியை உதறி தள்ளிய அதிமுக.. திரும்பிய வரலாறு!