Breaking Live: தலிபான்கள் காற்றில் சுட்டதில் 17 ஆஃப்கான் மக்கள் பலி

Latest News in Tamil Today LIVE: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சமூகம் மற்றும் அரசியல் நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.

ABP NADU Last Updated: 04 Sep 2021 05:30 PM
தலிபான்கள் காற்றில் சுட்டதில் 17 ஆஃப்கான் மக்கள் பலி

புதிய அரசு அமையவிருப்பதைக் கொண்டாடும் விதமாக ஆஃப்கானிஸ்தானில் தலிபான்கள் காற்றை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 17 ஆஃப்கான் பொதுமக்கள் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறன. 





Breaking News Tamilnadu: மாநிலங்களவை எம்பியானார் திமுகவின் அப்துல்லா

மாநிலங்களவை எம்பியாக திமுகவின் எம்.எம்.அப்துல்லா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மாநிலங்களவை எம்பி பதவிக்கு அதிமுக சார்பில் யாரும் அறிவிக்கப்படாத நிலையில் போட்டியின்றி தேர்வானார்.

Breaking News LIVE: தமிழ்நாட்டில் பள்ளிக்குச் சென்ற மூன்று மாணவர்களுக்கு கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் பள்ளிக்குச் சென்ற மூன்று மாணவர்களுக்கும், ஆசிரியர் ஒருவருக்கும் கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  

Covid 19 Active Cases in India: சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,99,778 ஆக உள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் 34,791 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 3,20,63,616 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,99,778 ஆகும். 

COVID-19 Vaccine Availability in States/UTs: 4.36 கோடி தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்கள் கைவசம் உள்ளன

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய அரசு செப்டம்பர் 3-ந் தேதி வரை, 65  கோடிக்கும் அதிகமான (65,00,99,080) கொரோனா  தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக வழங்கியுள்ளது.


இந்திய அரசு மற்றும் நேரடி மாநில கொள்முதல் வகை மூலம் மேலும், 1.20 கோடிக்கும் அதிகமான அளவு (1,20,95,700)  தடுப்பூசிகள் உள்ளன. சுமார் 4.36 கோடி (4,36,81,760) கொரோனா தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் வசம் உள்ளன.


 

கல்விக் கடன் வழங்கலை முறைப்படுத்த மத்திய நிதியமைச்சருக்கு மதுரை மக்களவை தொகுதி எம்.பி. கடிதம்

கல்விக் கடன் வழங்கலை முறைப்படுத்தவும் கண்காணிக்கவும் தொழில்நுட்ப ரீதியான வசதியை வழி நடத்தும் வங்கி மாவட்ட மேலாளர்களுக்கு வழங்கிட வேண்டும். வித்யா லட்சுமி தளத்தில் உள்நுழையும் ( Log in) வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மத்திய நிதியமைச்சருக்கு மதுரை மக்களவை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன்  கடிதம் எழுதியுள்ளார்.  


கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி பெயரில் விருது வழங்கப்படும் - தமிழக முதலமைச்சர் அறிவிப்பு


வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீன்குமாருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

பாராலிம்பிக் போட்டியில் ஆண்கள் உயரம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீன்குமாருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். புதிய ஆசிய சாதனையுடன்  உங்கள் வெள்ளிப் பதக்கம் ஒவ்வொரு இந்திய விளையாட்டு வீரருக்கும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது என்று தெரிவித்தார்.  

Annai Tamil Archanai scheme: தமிழ் வழி அர்ச்சனைக்கு தடைகோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

தமிழ் வழி அர்ச்சனைக்கு தடைக்கேட்டு தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வடசென்னையில் பண்டிதர் அயோத்திதாசருக்கு மணிமண்டபம் - முதல்வர் அறிவிப்பு

அயோத்திதாசர் பண்டிதரின் 175 ஆண்டு விழாவை போற்றும் வகையில் வடசென்னையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்தார். 

Annai Tamil Archanai scheme: தமிழில் அர்ச்சனை செய்வது கடவுளை அவமதிக்கும் செயல் - சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அன்னைத் தமிழ் அர்ச்சனை திட்டத்துக்கு தடை விதிக்க கோரிய  வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. தலைமை நீதிபதி நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது.       


மனுதாரரான 'OurTemples' தனது மனுவில், "தமிழில் அர்ச்சனை செய்வது கடவுளை அவமதிக்கும் செயல். மதச்சார்பற்ற நாட்டில் மதம் தொடர்பான விசயங்களில் தலையிட அரசுக்கு உரிமை கிடையாது" என்று தெரிவித்தார்.        

Kerala Covid 19 Cases: கடந்த வாரத்தில் பதிவான மொத்த பாதிப்புகளில் 69% கேரளாவில் பதிவாகியுள்ளன

கடந்த வாரத்தில் பதிவான மொத்த பாதிப்புகளில் 69% கேரளாவில் பதிவாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும்  47,092 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.   

Coronavirus Update: நாட்டின் 39 மாவட்டங்களில் கொரோனா வாரந்திர உறுதி விகிதம் 10%க்கும் அதிகமாக உள்ளது 


Latest News Today: பண்டிகை காலங்களில் மக்கள் ஒன்றாக கூடக் கூடாது - மத்திய அரசு

எதிர்வரும் பண்டிகை காலங்களில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்ற செய்தியை நாங்கள் தாழ்மையுடன் தெரிவிக்க விரும்புகிறோம். பண்டிகை காலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கக் கூடும். தடுப்பூசித் திட்டத்தை துரிதப்படுத்தினாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று நிதி அயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே பால் தெரிவித்தார்.  


வைரஸ் மரபணு ரீதியாக நிலையானதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. வைரஸில் பெரிய பிறழ்வு எதுவும் ஏற்பட்டால் நமது முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துவிடும். மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழல் இது.  தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள தயக்கம் இருக்கக் கூடாது. கர்ப்பிணி பெண்களுக்கு தற்போது தடுப்பூசிகள் போடப்படுகின்றன என்று தெரிவித்தார். 

Latest News Tamilnadu: அமைச்சர் மா.சுப்பிரமணியன் டெல்லி பயணம்

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மத்திய அமைச்சரை சந்திக்க இன்று டெல்லி பயணம்

மிதமான மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக செப்டம்பர் 6 வரை தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு; அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு

Background

Latest News in Tamil Today LIVE Updates: 


கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்தியாவை விட்டு வெளியேற முடியாமல் இருக்கும் வெளிநாட்டவரின் விசா மற்றும் தங்கும் காலம் 2021 செப்டம்பர் 30 வரை செல்லும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.