பருவமழை ஆலோசனை கூட்டம்


வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை காலமாக உள்ளது. தற்போது தென்மேற்கு பருவமழையின் தொடர்ச்சி ஆங்காங்கே இருந்து வரும் நிலையில், இன்று  வடகிழக்கு பருவமழைக்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பருவமழை பாதிப்பு தடுப்பது தொடர்பான பல்வேறு அறிவுறுத்தல்களை துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அவர் வழங்கினார். மேலும் வாசிக்க..


விநாயகர் சிலையுடன் சந்திரயான் 3 விண்கலம்


இந்த ஆண்டு நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. உலகமே இந்தியாவை திரும்பி பார்க்கச் செய்தது சந்திரயான் 3-இன் வெற்றி. இதனை கொண்டாடும் வகையில் சென்னை கீழ்கட்டளையில் விநாயகர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் விநாயகர் சிலைக்கு அருகே சந்திரயான் 3 விண்கலத்தின் மாதிரி அமைக்கப்பட்டுள்ளது.மேலும் வாசிக்க.


 நவதானிய விநாயகர்


விழுப்புரத்தில் இயர்கை சூழலை பாதுகாக்கும் வகையில் 600 கிலோ அளவில் நவதானியங்களை கொண்டு 12 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட விநாயகர் சிலை அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா இந்தியா முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தின்  பல்வேறு இடங்களில் காகித கூழ் விநாயகர் சிலைகள், பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் வைத்து கொண்டாடி வருகின்றனர். வீடுகளிலும் களிமண்ணாலான சிலைகள் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விழுப்புரம் அருகேயுள்ள கானையில் நவதானியங்களான கம்பு, கேழ்வரகு, மக்கா சோளம் போன்றைவை கொண்டு நவதானியங்களை கொண்ட வினாயகர் சிலையை வைத்து கிராம மக்கள் வழிபாடு செய்கின்றனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் கானை கிராமத்தில் 600 கிலோ நவதானியங்களால் உருவாக்கப்பட்ட 12 அடி உயர  விநாயகர் சிலைமேலும் வாசிக்க.


மத்திய அமைச்சருடன் தமிழ்நாடு எம்.பிக்கள் சந்திப்பு..


காவிரி நதியில் இருந்து ஒவ்வொரு மாதமும் தமிழ்நாடு விவசாயத்திற்காக குறிப்பிட்ட அளவு நீரை, வழங்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனை செயல்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் ஆகஸ்ட் மாதம் 11 ஆம்  தேதி டெல்லியில் நடைபெற்றது.  கூட்டத்தில், "தமிழ்நாட்டுக்கு முறைப்படி திறந்து விடவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடவில்லை. எனவே, உடனடியாக தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என தமிழக அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர். இதற்கு கர்நாடக அரசு தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.மேலும் வாசிக்க..


மேட்டூர் அணை நிலவரம்


கர்நாடகா மாநிலத்தில் பெய்து வந்த பருவ மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி வருகிறது. இதனால் அங்கிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 2,047 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 2,556 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 2,844 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் வாசிக்க..


வானிலை நிலவரம்..


தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க..