TN Headlines Today: 



  • அனைத்து தரப்பினரும் கொண்டாடும் விழாவாக கருணாநிதி நூற்றாண்டு விழா இருக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை அரசு சார்பில் கொண்டாடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் விழாவாக கருணாநிதி நூற்றாண்டு விழாவை நடத்த வேண்டும் என்று  அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, "நூற்றாண்டு விழாவில் செய்தி மக்கள் தொடர்பு துறை இதில் முக்கிய பங்காற்ற வேண்டும். பல்கலைகழகங்கள், கல்லூரிகள், மாணவர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், மக்கள் இணைந்து கொண்டாடுவதாக கலைஞர் நூற்றாண்டு விழா அமைய வேண்டும். ஆலோசனைகள் தொகுத்து பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். கருணாநிதியை பெருமைப்படுத்தும் விழாக்களாக மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கு அவர் நிறைவேற்றிக் காட்டிய திட்டங்களை மக்களுக்கு நினைவூட்டுபவையாக இந்த விழாக்கள் அமைய வேண்டும். மேலும் படிக்க



  • ஆளுநரைச் சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி.. அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு.. காரணம் என்ன?


எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து புகார் மனு அளித்தனர். தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கம், சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு, கள்ளச்சாராய மரணங்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தொடர்பாக மனு அளிக்கப்பட்டது. மேலும் படிக்க



  • "தோட்டக்கலைத் துறைக்கு ஏற்காட்டில் 40 ஏக்கர் பரப்பளவில் பண்ணை அமைந்துள்ளது" - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்


ஏற்காட்டில் 46வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்கியது. இதனை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அண்ணா பூங்காவில் வைக்கப்பட்டிருந்த மலர்கண்காட்சியினை ரிப்பன் வெட்டி தொடக்கி வைத்தனர். பின்னர் பூங்காவில் மலர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்த பொன்னியின் செல்வன் கப்பல் வடிவம், டிரேகன் வாரியர், சோட்டா பீம், ஹனி பீம் உள்ளிட்ட மலர் அலங்காரத்தினை கண்டுகளித்தனர். இதனைத் தொடர்ந்து ஏற்காடு மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவியினை அமைச்சர்கள் வழங்கினர். மேலும் படிக்க



  • ஜல்லிக்கட்டு விவகாரம்; துரோகக் கூட்டம் சொந்தம் கொண்டாடுவதா?- திமுக அரசிடம் ஓபிஎஸ் கேள்வி


ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு தொடர்பாக காவல் நிலையங்களில் பதியப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெறுமாறும், ஆன்லைன் பதிவுகளை ரத்து செய்யுமாறும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்  தி.மு.க. அரசை வலியுறுத்தி உள்ளார். மேலும் படிக்க



  • சொத்து குவிப்பு வழக்கு - முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்


வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் கே.பி.அன்பழகன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. தமிழ்நாட்டில் 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சி நடந்தது. இதில் சுகாதாரத்துறை அமைச்சராக சி.விஜய பாஸ்கரும், உயர்கல்வித்துறை அமைச்சராக கே.பி.அன்பழகனும் பதவி வகித்து வந்தனர். மேலும் படிக்க