TN Headlines Today: 



  • ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு


ஜல்லிக்கட்டுக்கு எதிரான விலங்குகள் நல அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய், சி.வி ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பை வழங்கியது.  அப்போது ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேரும் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். .மேலும் வாசிக்க..




  • அலங்காநல்லூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு மைதானம் 




தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், ”அலங்காநல்லூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை நாம் கட்டி வருகிறோம். வரும் சனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம்.” என்றும் முதலமைச்சர் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.மேலும் வாசிக்க..



  • அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. 


அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட வழங்கும் முன்பண உச்சவரம்பு ரூ.40 இலட்சத்திலிருந்து ரூ.50 இலட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது. 


அதன்படி, மாநில அரசு ஊழியர்களுக்கான வீடு கட்டும் முன்பணத்தின் உச்சவரம்பை ரூ.40. லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக (25%) உயர்த்தப்பட்டுள்ளது. அகில இந்திய சேவை அதிகாரிகளுக்கு வீடு கட்டும் முன்பணத்தின் உச்சவரம்பு ரூ.60 லட்சத்தில் இருந்து ரூ.75 லட்சமாக (25%) உயர்த்தப்பட்டுள்ளது.மேலும் வாசிக்க.



  • "விவசாயிகளை பாதுகாப்பதுதான் ஆவினை உயர்த்தும்" - பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்


சேலம் ஆவின் பால் பண்ணையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆவின் துறை அன்றாடம் மக்கள் வாழ்வில் தொடர்புடைய துறை, மிகவும் கவனமாக கையாளக்கூடிய துறையாக விளங்குகிறது.” எனத் தெரிவித்தார்.மேலும் வாசிக்க..



  • விளையாடிக் கொண்டே படிக்க விருப்பமா ?


மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி ( SPORTS HOSTEL 2023 - 2024 )


 - மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, இராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.மேலும் வாசிக்க..



  • இன்றைய வானிலை நிலவரம்


தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், ஈரோடு மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, ஆங்காங்கே மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக



  • "தமிழகத்தில் விரைவில் உண்மையான வெண்மை புரட்சி ஏற்படுத்துவோம்" - அமைச்சர் மனோ தங்கராஜ்!


சேலம் ஆவின் பால் பண்ணையை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் ஆய்வு செய்தார்.தமிழகத்தில் வெண்மை புரட்சி என்பதை நிறைவேற்றிக் காட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கான பணிகளை நிச்சயம் மேற்கொள்வோம் என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். மேலும் வாசிக்க..