சேலம் ஆவின் பால் பண்ணையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆவின் துறை அன்றாடம் மக்கள் வாழ்வில் தொடர்புடைய துறை, மிகவும் கவனமாக கையாளக்கூடிய துறையாக விளங்குகிறது. அதுமட்டுமில்லாமல் பால் உற்பத்தியாளர்கள், தமிழகத்தின் கோடிக்கணக்கான மக்கள் இருவருக்கும் இடையே ஒருபாலமாக அமையக்கூடிய துறையாக உள்ளது. உற்பத்தியாளருக்கு நேர்மையான விலையையும் சிறந்த மார்க்கெட்டை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்றார். மக்களுக்கு தரமான பால் மற்றும் பால் பொருட்கள் உரிய நேரத்தில் நியாயமான விலையில் உயர்தரத்தில் கிடைப்பதற்கு பணியை செய்யக் கூடியது எங்களுடைய நோக்கம், இந்த ஆண்டு பால் உற்பத்தி பெருக்குவதற்கு முக்கியமான காரியமாக தமிழகத்தில் பால் உற்பத்தியை பெருக்குவதற்கு இரண்டு லட்சம் கறவை மாடுகள் கொடுக்கும் திட்டத்தை உடனடியாக துவங்கப்பட்டுள்ளது. இதற்கான கடன் உள்ளூர் வங்கி மூலமாக பால் உற்பத்தியாளர் சங்கங்களை ஒருங்கிணைத்து பணிகளை மேற்கொள்ள உள்ளோம் எனவும் பேசினார்.



கறவை மாடுகளுக்கு காப்பீடு திட்டம் கொண்டு வரலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு பெருமளவில் பயனுடையதாக இருக்கும் என்றார். நிர்வாக ரீதியாக, உற்பத்தி ரீதியாக எந்த மாதிரி மாற்றங்கள் கொண்டு வர முடியும், இதை நம்பி இருக்கும் விவசாயிகள், பணியாளர்கள் அனைவரும் நலனையும் கருத்தில் கொண்டு முறையான முடிவு எடுப்போம் அதற்காக தான் ஆய்வு நடைபெற்று வருகிறது. பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை அதில் ஓரளவுக்கு நியாயம் உள்ளது. பாலில் வருடம் முழுவதும் விவசாயிகள் பால் கொடுத்தால் எடுப்போம். தனியார் ஒரு நேரத்தில் எடுப்பார்கள், மற்றொரு நேரத்தில் எடுக்காமல் கூட போய் விடுவார்கள். ஆனால் ஆவினை பொருத்தவரைக்கும் எப்பொழுதும் எடுப்போம், லாபநோக்கத்துடன் விற்க முடியாது, மீண்டும் மக்களிடையே செல்லும் என்பதால் இரண்டையும் சரிசமமாக கையாண்டு விவசாயிகள் குறித்து ஆய்வு செய்து விவசாயிகளுக்கு கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்தார். விவசாயிகள் பல்வேறு வகையில் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எந்தெந்த வகையில் விவசாயிகளுக்கு துணை நிற்க முடியும் என்பதை ஆலோசித்து நல்ல மாற்றத்தை வெகு விரைவில் செய்வோம்.



மானியம் குறித்த கேள்விக்கு நான் பொறுப்பெடுத்து ஒரு வாரங்கள் தான் ஆகிறது, முதலில் ஆவின் என்பது பொதுத்துறை. எனவே ஆவினில் எந்த விதமான பிரச்சனைகள் உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். எங்களது பலம் பலவீனம், சவால்கள், வாய்ப்புகள் குறித்து ஆராய வேண்டும். இதனை முழுமையாக ஆய்வு செய்த பிறகு நிச்சயமாக பால் கொள்முதலுக்கு பல திட்டங்களை கொண்டு வருவோம் என்றார். விவசாயிகளை பாதுகாப்பு தான் ஆவினை உயர்த்தும் என்றார். கேரளா போன்ற வெளிமாநிலங்களுக்கு பால் ஏற்றுமதி செய்யப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், பால் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது குற்றச்சாட்டு எனக்கு வந்தது. நிச்சயமாக சட்டவிரோதமாக முறையான அனுமதி இல்லாமல் தனியார் பால் சங்கங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். ஏற்று கூலியை உயர்த்தி தருவதாக காட்டிவிட்டு வெளியில் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதேபோன்று அவர்கள் வருடம் முழுவதும் பால்களை வாங்கவில்லை. கவர்ச்சிகரமான திட்டங்களை சொல்லிவிட்டு அவர்களை செய்யாததை நிச்சயமாக கண்காணிக்கப்படும் என்று கூறினார்.