• Actor Vijay: விஜயின் இலக்கு..! மாணவர்களை கொண்டு அரசியல் அடித்தளமா? 17-ஆம் தேதி நடக்கப்போவது என்ன?


நடிகர் விஜய் 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை சந்திப்பதின் மூலம், தனது அரசியல் பிரவேசத்தை விரைவுபடுத்துவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாணவர்கள் உடனான சந்திப்பு தொடர்பாக விஜய் அறிவித்துள்ளார். தற்போது 10 மற்றும் 12ம் வகுப்பு முடித்தவர்கள் 2024ம் ஆண்டு தேர்தலில் இல்லாவிட்டாலும், 2026ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது வாக்களிக்க தகுதி பெற்றுவிடுவார்கள். இந்த நிலையில் அவர்களை சந்திப்பதன் மூலம் வருங்கால தலைமுறையினரை ஈர்த்து அவர்களது வாக்குகளை அறுவடை செய்யவே, இந்த சந்திப்பை விஜய் ஏற்பாடு செய்திருப்பதாகவும் அவருடைய  நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் படிக்க https://tamil.abplive.com/entertainment/plan-behind-actor-vijays-school-students-meet-on-june-17-in-chennai-121778/amp



  • Murasoli: சுய விளம்பரம் தேடி தேவையற்ற விவகாரங்களில் தலையிடுகிறார்.. ஆளுநர் மீது முரசொலி கடும் விமர்சனம்


ஆளுநரின் பருப்புகள் தமிழ்நாட்டில் வேகாது என முரசொலி நாளேடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சிலந்தி பகுதியில் கட்டுரை வெளியிட்டு கடும் விமர்சனத்தை பதிவு செய்துள்ளது. இதுகுறித்து வெளியான கட்டுரையில், “தானும் எந்த வேலையும் செய்யாமல், வேலை செய்கிறவர்களையும் தடுத்திடும் சில ஜென்மங்கள் குறித்து இந்தப் பழமொழி கூறப்பட்டது! தமிழ்நாட்டுக்கு ஆளுநர் என்ற பெயரில் ஒரு ‘சுகஜீவி' நியமிக்கப்பட்டு அவர் இப்போது செய்து கொண்டிருக்கும் பணி இத்தகையதுதான்! என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/politics/murasoli-dmk-mouth-piece-on-governor-rn-ravi-strongly-criticised-that-the-governors-tactics-wont-work-out-in-dravidian-land-121750/amp



  • Minister Mano Thangaraj : ஆவினில் சிறார்கள் பணியாற்றுகிறார்களா? - வெளிப்படையாக பதிலளித்த அமைச்சர் மனோ தங்கராஜ்


சென்னை அம்பத்தூரில் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட சிறார் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டதாக புகார் எழுந்தது. சிறார்களை வேலைக்கு அமர்த்தியதும் மட்டுமின்றி அவர்களுக்கு ஊதியமும் வழங்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பால் பண்ணை நுழைவாயில், வேலையை வாங்கிக் கொண்டு ஊதியம் வழங்கவில்லை என்று கூறி 30 சிறார்கள் நேற்று போராட்டத்தில் குதித்துள்ளதாக தகவல் வெளியாகியது.  இந்நிலையில், சென்னை அம்பத்தூர் பால் பண்ணையில் சிறார்கள் பணி அமர்த்தப்படவில்லை என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/minister-mano-thangaraj-explained-child-workers-in-chennai-ambattur-aavin-company-complaint-121819/amp



  • TN Rain Alert: தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? ஒரு ஜில் அப்டேட்



தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மேலும் படிக்க