TN Headlines Today June 27: 



  • தக்காளி விலை உயர்வு


கடந்த இரண்டு நாட்களாக தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஒரு கிலோ நாட்டு தக்காளி சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளியின் விலை 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டு தக்காளி 15 கிலோ பெட்டி 800 ரூபாய்கும், நவீன் தக்காளி 15 கிலோ பெட்டி 900 ரூபாய்கும் விற்பனை செய்யபடுகிறது. தொடர் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டதன் காரணமாக வரத்து குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தக்காளியின் விலை மேலும் உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.மேலும் வாசிக்க..




  • தமிழ்நாட்டில் புதியதாக 6 தொழிற்பேட்டைகள்




சென்னை, நந்தம்பாக்கத்தில் பன்னாட்டு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர், அவர் பேசியதாவது“ கலைஞர் நூற்றாண்டை கொணடாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த தொழில் நிறுவனங்களின் நாள் மிக சிறப்பாக எழுச்சியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சமூக நீதியும். சமச்சீர் தொழில் வளர்ச்சியும் கலைஞரின் இரு கண்கள். பெரு நிறுவனங்களுக்கும், சிறு நிறுவனங்களுக்கும் ஒரே கொள்கை என்பது அனைவரையும் உள்ளடக்கிய சமச்சீர் வளர்ச்சிக்கு ஏற்றது அல்ல என்பதை உணர்ந்தவர் கலைஞர்.மேலும் வாசிக்க..



  • கைதுக்கான காரணத்தை உடனடியாக கூறவேண்டிய அவசியமில்லை - அமலாக்கத்துறை திட்டவட்டம்..


சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நடைபெற்றது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான என்.ஆர் இளங்கோ கடந்த வாரம் 22-ஆம் தேதி வாதிட்டார். இரு தரப்பினருக்கும் காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது அமலாக்கத்துறை தரப்பு வாதம் இன்று நடைபெறும் என கூறி வழக்கை ஒத்தி வைத்தனர். இன்று செந்தில் பாலாஜி தரப்பில்  உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியும் நேரில் ஆஜரானார்.மேலும் வாசிக்க..



  • மெர்க்கண்டைல் வங்கியில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை..!


தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் வருமானவரித்துறை நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ கிருஷ்ணன் சுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அலுவலகத்திற்கு வருபவர்கள் உள்ளே அனுமதிக்கப்படாமல், வங்கி ஊழியர்கள் மட்டுமே மிகுந்த சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியை பொறுத்தவரை 1921ம் ஆண்டு துவங்கி தமிழகம் முழுவதும் தற்போது 500க்கும் மேற்பட்ட கிளைகளை அமைத்து செயல்பட்டு வருகிறது.மேலும் வாசிக்க.



  • தமிழ்நாட்டில் இன்னும் எத்தனை நாட்களுக்கு மழை தொடரும்? 


மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 29.06.2023 முதல் 01.07.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். மேலும் வாசிக்க..